வெள்ளத்தில் சிக்கி, லாவகமாக மீண்ட பசு மாடு

 

வெள்ளத்தில் சிக்கி, லாவகமாக மீண்ட பசு மாடு

சென்னை

சென்னை குன்றத்தூர் அருகே வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட பசுமாடு ஒன்று, லாவகமாக நீந்தி கரையேறிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

வெள்ளத்தில் சிக்கி, லாவகமாக மீண்ட பசு மாடு

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து உபரிநீர் திறக்கப்பட்டதால், குன்றத்தூர் – ஸ்ரீபெரும்புதூர் செல்லும் சாலை காவனூர் பகுதி மற்றும் அதனை சுற்றியுள்ள முப்பதுக்கும் மேற்பட்ட கிராமங்கள் துண்டிக்கப்பட்டன. இந்த நிலையில், மேய்ச்சலுக்காக சென்ற பசுமாடு ஒன்று, வெள்ள நீரின் நடுவே சிக்கிக்கொண்டது. இதனை கண்டு மாட்டின் உரிமையாளரும், அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாரும் குரல் எழுப்பினர். இதனைகேட்டு, கரையை நோக்கி லாவகமாக நீந்தி வந்த அந்த மாடு, திடீரென சாலையில் ஏற்பட்ட பள்ளத்தில் சிக்கி நீரில் அடித்துச்செல்லப்பட்டது.

வெள்ளத்தில் சிக்கி, லாவகமாக மீண்ட பசு மாடு

இதனால் அங்கிருந்தவர்கள் அச்சமடைந்த நிலையில், நீரில் நீந்தியபடி சென்ற அந்த மாடு சிறிது தூரத்தில் சென்று கரை சேர்ந்தது. இதனையடுத்து, போலீசார் அந்த மாட்டை பாதுகாப்பாக கரை செல்லும்படி விரட்டிவிட்டனர்.