கடும் குளிரிலும் தொடரும் போராட்டம் : விவசாயிகளுடன் மத்திய அரசு இன்று பேச்சுவார்த்தை!

கடும் குளிரிலும் தொடரும் போராட்டம் : விவசாயிகளுடன் மத்திய அரசு இன்று பேச்சுவார்த்தை!

டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் மத்திய அரசு இன்று பேச்சுவார்த்தை நடத்துகிறது.

கடும் குளிரிலும் தொடரும் போராட்டம் : விவசாயிகளுடன் மத்திய அரசு இன்று பேச்சுவார்த்தை!

அண்மையில் மத்திய அரசு மூன்று வேளாண் சட்டங்களை அமலாக்கியது. ஆனால் இந்த வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு எந்த லாபமும் இல்லை என்றும் நஷ்டமே வந்து சேரும் எனவும் கூறி தொடர்ந்து இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு விவசாயிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர். தமிழகத்திலும் இதன் எதிரொலியாக பல இடங்களில் போராட்டம் நேற்று நடைபெற்றது.

கடும் குளிரிலும் தொடரும் போராட்டம் : விவசாயிகளுடன் மத்திய அரசு இன்று பேச்சுவார்த்தை!

அந்த வகையில் டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகள் சங்கத்துடன் மத்திய அரசு இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளது. மாலை 3 மணிக்கு விக்யான் பவனில் மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திர சிங் தோமர் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

கடும் குளிரிலும் தொடரும் போராட்டம் : விவசாயிகளுடன் மத்திய அரசு இன்று பேச்சுவார்த்தை!

வரும் 3ஆம் தேதியே விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த இருந்த நிலையில் முன்கூட்டியே இரண்டு நாட்களுக்கு முன்பு பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது. டெல்லியில் நிலவும் கடும் குளிர், கொரோனா மற்றும் காற்று மாசுபாடு உள்ளிட்ட பல காரணிகளை முன்னிறுத்தி முன்கூட்டியே பேச்சுவார்த்தை நடத்துகிறார் விவசாய அமைச்சர் நரேந்திர சிங் தோமர். இந்தப் பேச்சுவார்த்தையில் சுமார் 32 விவசாய சங்கங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது . இதில் முடிவு எட்டப்படாத நிலையில் மீண்டும் டிசம்பர் 3ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது