வேளாண் மசோதாவுக்கு எதிராக போராட்டம்: தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் ஆதரவு

வேளாண் மசோதாவுக்கு எதிராக போராட்டம்: தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் ஆதரவு

வேளாண் மசோதாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டத்திற்கு, தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் ஆதரவு என்று நாகையில் காவிரி தனபாலன் அறிவித்தார்.

வேளாண் மசோதாவுக்கு எதிராக போராட்டம்: தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் ஆதரவு

மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் மசோதாக்கள் மக்களவை , மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. இதனை கண்டித்து திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வரும் 28-ஆம் தேதி தமிழகத்தில் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளனர்.

வேளாண் மசோதாவுக்கு எதிராக போராட்டம்: தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் ஆதரவு

இந்த போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது. இது குறித்து நாகையில் செய்தியாளர்களிடம் கூறிய இயக்கத்தின் தலைவர் காவிரி தனபாலன், ’’மத்திய அரசு நிறைவேற்றிய 3 சட்ட மசோதாக்கள் விவசாயிகளுக்கு நன்மை தராது. வேளாண் பொருட்களுக்கு தனியார் குறைந்தபட்ச ஆதரவு விலை தருவார்கள் என்பது ஏற்றுக்கொள்ள இயலாது .

வேளாண் மசோதாவுக்கு எதிராக போராட்டம்: தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் ஆதரவு

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்ட மசோதா விவசாயிகளுக்கு எதிராக உள்ளதால், விவசாயிகளுக்காக எதிர்க்கட்சிகள் நடத்தும் போராட்டத்தில் தமிழ்நாடு விவசாய சங்கங்களின் கூட்டியக்கம் சார்பில் அனைத்து விவசாயிகளும் பங்கேற்பது என முடிவெடுத்துள்ளோம். இந்த மசோதாவிற்கு தமிழக அரசு தனது எதிர்ப்பை தெரிவித்து, விவசாயிகளை காக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என கேட்டுக் கொண்டார்.