தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம்!

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம்!

தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக பல்வேறு மாவட்டங்களில் போராட்டம் நடைபெற்றது.

நாடு முழுவதும் பல்வேறு எதிர்ப்புகளுக்கும், எதிர்பார்ப்புகளுக்கும், சர்ச்சைக்களுக்கும் மத்தியில் இன்று மதியம் 2 மணிக்கு நீட் தொடங்கவுள்ளது. தமிழகத்தில் ஒரு லட்சத்து 17 ஆயிரத்து 990 மாணவர்கள் தேர்வை எதிர்கொள்ள உள்ளனர்.

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம்!

மருத்துவ நுழைவு தேர்வான நீட் தேர்வினால் ஏற்படும் அச்சத்தால் தமிழகத்தில் பல மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். உயிர் பலி கேட்கும் நீட் தேர்வு தமிழகத்திற்கு வேண்டாம் என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், கல்வி ஆர்வலர்களும் கருத்து கூறி வருகிறார்கள்.

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம்!

இந்நிலையில் நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி மதுரை கேந்திரிய வித்யாலயா பள்ளி முன்பு மக்கள் கூட்டமைப்பு சார்பில் போராட்டம் நடத்தினர். அதேபோல் கரூர் சுங்ககேட் பகுதியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர். மேலும் கும்பகோணம் பழைய டைமண்ட் திரையரங்கம் முன் விசிகவினர் சாலை மறியல் ஈடுப்பட்ட நிலையில் அவர்களை போலீசார் அப்புறப்படுத்தி கைது செய்தனர்.