பலம் வாய்ந்த இரு அணிகள் மோதல்! மும்பை Vs டெல்லி #MIvsDC

 

பலம் வாய்ந்த இரு அணிகள் மோதல்! மும்பை Vs டெல்லி #MIvsDC

இன்று விடுமுறை தினம் என்பதால் ஐபிஎல் திருவிழாவில் இரண்டு போட்டிகள். முதல்போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் Vs ராஜஸ்தான் ராயல்ஸ்.

இரண்டாம் போட்டியில்மோதுகின்றன மும்பை இண்டியன்ஸ் vs டெல்லி கேப்பிட்டல்ஸ். இரு அணிகளும் பலம் வாய்ந்தவை என்பதால் போட்டியில் ரன்வேட்டை நடக்கும்.

பலம் வாய்ந்த இரு அணிகள் மோதல்! மும்பை Vs டெல்லி #MIvsDC

ஆறு போட்டிகளில் ஆடிய டெல்லி அணி, 5 –ல் வென்று பாயிண்ட் டேபிளில் முதல் இடத்தில் உள்ளது. மும்பை அணி ஆறு போட்டிகளில் விளையாடி, நான்கில் வென்று இரண்டாம் இடத்தில் உள்ளது. எனவே டெல்லி அணி முதல் இடத்தைத் தக்க வைக்கவும், மும்பை அதிக ரன் வித்தியாசத்தில் வென்று முதலிடத்தைப் பறிக்கவும் விரும்பும்.

மும்பை இண்டியன்ஸ் அணியில் டி காக், ரோஹித் சர்மா எனும் அருமையான ஓப்பனிங். ஒன் டவுன் சூர்குமார், இஷான் கிஷன், க்ருனால் பாண்டியா, ஹிர்திக் பாண்டியா, பொலார்டு என பேட்டிங் மிடில் வரை சீராகவும் ஃபார்மில் உள்ளவர்களாகவும் இருக்கிறார்கள்.

பலம் வாய்ந்த இரு அணிகள் மோதல்! மும்பை Vs டெல்லி #MIvsDC

பவுலிங்கில் பும்ரா, போல்ட், சாஹர், பட்டின்சன், பொலார்டு எதிரணியைத் திணறிடித்து வருகின்றனர். ராஜஸ்தான் அணியுடனான போட்டியில் போல்ட் 4 ஓவரில் 26 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளையும் பறித்தார். பும்ரா 20 ரன்கள் மட்டுமே க்டுத்து 2 விக்கெட்டுகளையும் பட்டின்சன் 19 ரன்கள் மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளையும் பறித்தனர்.

பலம் வாய்ந்த இரு அணிகள் மோதல்! மும்பை Vs டெல்லி #MIvsDC

டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியும் இதற்கு குறைந்தது இல்லை. ஓப்பனிங் பேட்ஸ்மேன் ப்ரிதிவ் ஷா செம ஃபார்மில் இருக்கிறார். அவருக்கு உதவ தவானும் ஆடுகிறார். ஸ்ரேயாஸ், ரிஷப் பண்ட், ஸ்டொனிஸ், ஹெட்மெயர் வரை பேட்டிங் இருக்கிறது. ஆனால், முதல் நான்கு வீரர்களே முடிந்தளவு பேட்டிங்கை முடித்து விடுகின்றனர்.

பவுலிங்கில் ரபாடா, அஸ்வின், அக்ஸர் படேல் ஆகியோர் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு சவாலான பந்துகளை வீசி வருகிறார்கள்.

பலம் வாய்ந்த இரு அணிகள் மோதல்! மும்பை Vs டெல்லி #MIvsDC

இன்றைய போட்டியில் இருவருக்குமான வெற்றி வாய்ப்பு சமமாகவே இருக்கிறது. யார் டாஸ் வின் பண்ணினாலும் முதலுல் பேட்டிங் ஆடி அதிக ரன்களைக் குவிக்கவே விரும்புவார்கள்.