‘நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளை கைது செய்க’; விவசாய சங்கத் தலைவர் திடீர் போராட்டம்!

‘நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளை கைது செய்க’; விவசாய சங்கத் தலைவர் திடீர் போராட்டம்!

திருச்சி அருகே சாலை அமைக்கும் நெடுஞ்சாலைத் துறையினரை கைது செய்யக்கோரி விவசாய சங்கத் தலைவர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்.

திருச்சி துவாக்குடியில் சாலையை விரிவுப்படுத்துவதற்காக அப்பகுதியில் இருக்கும் 13 ஏரிகளை மூடி சாலைகள் அமைக்கப்படுவதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விவசாய சங்கத்தலைவர் சின்னதுரை, சமூக ஆர்வலர் சம்சுதீன் சாலை விரிவாக்கத்திற்கு ஏரிகளை மூடாமல் உயர்மட்ட பாலம் கட்டி பணியை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விடுத்தனர். ஆனால், அதனை பொருட்படுத்தாமல் நெடுஞ்சாலைத்துறையினர் ஏரிகளை மூடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

‘நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளை கைது செய்க’; விவசாய சங்கத் தலைவர் திடீர் போராட்டம்!

இந்த நிலையில், விவசாய சங்கத்தலைவர் சின்னதுரை பரந்தான் குளத்தில் அமர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். நெடுஞ்சாலைத் துறையினருக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பிய அவர், உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக செயல்படும் அதிகாரிகளை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். தகவலறிந்து வந்து போலீசார், போராட்டத்தை கைவிடுமாறு பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

‘நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளை கைது செய்க’; விவசாய சங்கத் தலைவர் திடீர் போராட்டம்!

ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்த சின்னதுரை, உயர்மட்ட பாலம் அமைத்து பணிகளை மேற்கொண்டால் தான் போராட்டத்தை கைவிடுவேன் என காட்டமாக தெரிவித்தார். இதனால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.