Home இந்தியா "குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்" : பிரதமர் மோடி அறிவுறுத்தல்!

“குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” : பிரதமர் மோடி அறிவுறுத்தல்!

உ.பி.யில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்படும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தைச் சேர்ந்த 19 வயது பெண் ஒருவரை 4 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கியது. பாதிக்கப்பட்ட பெண்ணின் உடலில் காயங்கள் இருந்ததுடன், அவரின் கழுத்து எலும்பு முறிக்கப்பட்டு, நாக்கு அறுக்கப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து அப்பெண் டெல்லி சப்தர்ஜங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் யோகி ஆதித்யநாத், “உ.பி.யில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. சிறப்பு விசாரணை குழு ஒருவாரத்தில் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஹத்ராஸில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என பிரதமர் மோடி தொலைபேசியில் என்னிடம் அறிவுறுத்தினார்” என்று தெரிவித்துள்ளார்.

மாவட்ட செய்திகள்

Most Popular

குடும்ப தகராறில் கூலி தொழிலாளி, விஷம் குடித்து தற்கொலை!

தருமபுரி பாலக்கோடு அருகே குடும்ப தகராறில் விஷம் குடித்த கூலி தொழிலாளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தருமபுரி மாவட்டம் பாலக்கோடு...

முதல் நாள் வன்கொடுமை -மறுநாள் கொலை முயற்சி -பெண் சாப்ட்வேர் என்ஜினீயரின் பரிதாப நிலை

ஒரு பெண் சாஃப்ட்வேர் என்ஜினீயரை ஒரு தலையாக காதலித்த ஒருவர் அவரை கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்ற சம்பவம் பலரை அதிச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அவங்க கடைசியா தான் ஓட்டு போடணும்.. தேர்தல் ஆணையம் கெடுபிடி!

கொரோனா நோயாளிகள் கடைசியாகத் தான் வாக்களிக்க வேண்டுமென தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது....

“விசிகவுக்கு 6 தொகுதிகள்” : பாஜகவால் கலக்கத்தில் திருமா

திமுக கூட்டணியில் உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 6 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தலில் திமுக- விசிக...
TopTamilNews