உள்ளாட்சி பதவிகளை ஏலம் விட்டால் கடும் நடவடிக்கை – தேர்தல் ஆணையம் எச்சரிக்கை!

 

உள்ளாட்சி பதவிகளை ஏலம் விட்டால் கடும் நடவடிக்கை – தேர்தல் ஆணையம் எச்சரிக்கை!

உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதிவிகளை ஏலம் விட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு அக்டோபர் மாதத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அக்டோபர் மாதம் 6 மற்றும் 9ம் தேதிகளில் இரண்டு கட்டமாக தேர்தல் நடக்கிறது. அதற்கான வேட்பு மனுத்தாக்கல் தொடங்கிவிட்டது. 22 ஆம் தேதியோடு வேட்புமனு தாக்கல் நிறைவடைய உள்ள நிலையில் பலர் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.

உள்ளாட்சி பதவிகளை ஏலம் விட்டால் கடும் நடவடிக்கை – தேர்தல் ஆணையம் எச்சரிக்கை!

இதனிடையே தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தல் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டுவருகிறது. தேர்தலுக்கான நடவடிக்கைகள் குறித்து பொது மக்களும் அரசியல் கட்சியினரும் புகார் அளிக்கலாம் என தெரிவித்து அதற்கான புகார் எண்களையும் அறிவித்துள்ளது. மேலும் வாக்குச்சாவடிகள், வாக்கு எண்ணும் மையங்கள் என அனைத்து கட்ட ஏற்பாடுகளையும் செய்து வருகிறது.

இந்த நிலையில், உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிகளை ஏலம் எடுப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு பிற மாவட்டங்களுக்குப் உள்ளாட்சி தேர்தல் நடந்தபோது கிராமங்களில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிகள் ஏலம் விடப்பட்டன. ஏலம் எடுப்பவர்கள் தேர்தலில் வேட்பாளர்களாக போட்டியிட அனுமதி அளிக்கப்பட்ட குற்றம் அரங்கேறியது. அதுபோன்ற குற்றங்கள் மீண்டும் நடைபெறாத வண்ணம் நடவடிக்கை எடுக்க மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.