அரசு மருத்துவமனையில் உலாவும் நாய்கள் : தொடரும் அவலம்!

 

அரசு மருத்துவமனையில் உலாவும் நாய்கள் : தொடரும் அவலம்!

நாக்பூர் அரசு மருத்துவமனையில் இரவு நேரத்தில் நாய்கள் உலாவும் வீடியோ ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

அரசு மருத்துவமனை என்றாலே அலட்சியப் போக்கு தான் என்பது மக்கள் மனதில் பதிந்து விட்டது. அவ்வப்போது தவறான சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் காலாவதியான மருந்துகள் வழங்கப்படுவதாகவும் தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. அண்மையில் மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில், குழந்தைகளுக்கு சொட்டு மருந்துக்கு பதிலாக கிருமி நாசினி வழங்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அரசு மருத்துவமனையில் உலாவும் நாய்கள் : தொடரும் அவலம்!

கிருமிநாசினியை உட்கொண்ட சிறுவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இச்சம்பவம் அரங்கேறி ஒரு சில நாட்களிலேயே, யவத்மால் அரசு மருத்துவக்கல்லுரி மருத்துவமனையில் நோயாளிகள் வார்டில் இரவு நேரத்தில் நாய்கள் உலாவும் காட்சிகள் இணையதளத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

அந்த வீடியோ சோஷியல் மீடியாக்களில் வெகுவாக பகிரப்பட்டு வருகிறது. இதனை அறிந்த மருத்துவமனை நிர்வாகம், பாதுகாவலர்கள் நாய்களை வெளியே துரத்தாமல் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என விசாரித்து வருகிறது. அரசு மருத்துவமனைகளின் இத்தகைய அலட்சிய போக்கிற்கு நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.