அன்புள்ள ஆல்கஹாலே… பிக்பாஸ் வீட்டில் வித்தியாசமான கடிதம்!

 

அன்புள்ள ஆல்கஹாலே… பிக்பாஸ் வீட்டில் வித்தியாசமான கடிதம்!

கோலாகலமாக தீபாவளியைக் கொண்டாடுவதற்கு பிக்பாஸ் ப்ளான் பண்ணியிருக்கார் போலிருக்கு. அதற்காக செம பில்டப் கொடுப்பதற்காக நேற்றைய எப்பிசோட்டில் வைக்கலாம்னு ட்ரை பண்ணியும் பார்த்தார். ஆனா, எல்லாமே நமுத்து போன பட்டாசாப் போயிடுச்சே பிக்கி. என்ன செய்ய?

பிக்பாஸ் 37-ம் நாள்

அன்புள்ள ஆல்கஹாலே… பிக்பாஸ் வீட்டில் வித்தியாசமான கடிதம்!

வாரத்தின் முதன்நாளே தீபாவளி கொண்டாட்ட மனநிலைக்கு ஹவுஸ்மேட்ஸ்களைக் கொண்டுபோக ’தீபாவளி… தீபாவளி…’ என சிவகாசி படப் பாடலை ஒலிக்க விட்டார் அந்தத் தம்பி. (அல்லது தங்கை) ‘நீ என்ன பாட்டு வேணா போட்டுக்கோ, நாங்க ஒரே ஸ்டெப்பைத்தான் ஆடுவோம்னு வெத்து காட்டினாங்க ஹவுஸ்மேட்ஸ்.

பாட்டு, டான்ஸ் (!) முடிஞ்சதும், எல்லோரும் வட்டமாகக் கைகோர்த்து நிற்க, ‘இனிமே குட்மார்னிங், குட் நைட் சொல்வதற்குப் பதிலாக, காலை வணக்கம், நல்லிரவு என்று சொல்லணும்’ புது கேப்டன் ஆரியின் ரிக்வெஸ்ட் இல்ல இல்ல வேண்டுகோள்.

அன்புள்ள ஆல்கஹாலே… பிக்பாஸ் வீட்டில் வித்தியாசமான கடிதம்!

கிச்சன் சண்டை பார்த்து ரொம்ப நாளாச்சேன்னு நினைச்சிட்டு இருந்தப்ப, அனிதாவையும் ஷனமையும் அந்த ஏரியாவில் பார்த்ததும் இன்னிக்கு இருக்கு… என உள்ளம் துள்ளிக்குதித்தது. நினைத்தது பொய்க்க வில்லை.  பொங்கலுக்கு சாம்பார் வைக்க பருப்பு இல்லையேன்னு அனிதா சொன்னதும், வத்தக் குழம்பை சைட்டிஸ்ஸாக வெச்சிடலாம்னு சூப்பரான ஐடியாவைக் கொடுத்தார் ஷனம். பொங்கலுக்கு வத்தக்குழம்பு செம காம்பினேஷன்.

மூட் அவுட்டில் இருப்பதுபோல இருந்த அனிதாவை சோம்ஸ் ஓவரா ஓட்ட, ரியோவும் சேர்ந்துகொள்ள கோவிச்சிட்டு போய் படுத்துட்டார். ரியோ ஹீட்டாகி, திரும்ப வந்த அனிதாவிடம் கேட்க, பருப்பு ஊர்ற வரைக்கும் ரெஸ்ட் எடுத்தேன் என்றார் கூலாக. உண்மை அது இல்லை என்று ரியோ சொல்ல ‘ஆமா’என்றார் இன்னும் கூலாக. அந்த ’கூல்’ ரியோவை கடுப்பேத்த கத்திவிட்டார். ஷனம் இருக்கும் இடத்தில் சண்டை இல்லாமல் இருந்தா எப்படி?

’மூன் தால்’ சாம்பார் வைக்கலாமா… கூடாதா? அப்படி வைத்தால் மதியம் வரை வீணா போகாம இருக்குமா… இருக்காதா? என திருவிளையாடல் தனமாக பஞ்சாயத்து போனது ஒரு பக்கம்.

அன்புள்ள ஆல்கஹாலே… பிக்பாஸ் வீட்டில் வித்தியாசமான கடிதம்!

கேப்டன் என்பதால் இரு தரப்பும் ஓஹோ.. ஆஹானுட்டு இருந்தார் ஆரி. ‘பருப்புக்கெல்லாம் சண்டையா… வேற மாதிரி இருக்கும்போலயே’னு டாய்லெட்கிட்ட போய் புலம்பிட்டு இருந்தார் சோம்ஸ்.

பிரச்சனை எளிது. கிச்சனில் நன்கு சமைக்க தெரிஞ்ச ஒருவர் இருக்க, கூட்டத்தோடு சமைப்பது என்பது அனிதாவுக்கு எளிது. ஆனா, அவரே முழு பொறுப்பேற்று சமைப்பதென்பது முடியவில்லை. அதுவும் அருகில் ஷனம் வேற. சோம்ஸ் கிண்டல் செய்யும்போதே அனிதாவுக்கு ரட்சகன் நாகார்ஜூனன் மாதிரி கோபத்துல நரம்பு புடைஞ்சுது… ஜித்தன் ரமேஷூம் சேர்ந்து கிண்டல் செய்ய… ஏம்பா நீயெல்லாம் வீட்டில் இருக்கியான்னே தெரியல… ஆனா, இந்த மாதிரி நேரத்துல கரெக்டா வந்துடுறன்னு ஒரு லுக் விட்டார். ரியோ பேசியதும் உட்சபட்சமாகி விட்டது.

சிறிதுநேரம் கழித்து அனிதா என்ன நினைத்தாரோ தெரியல… ரியோவோடு சமாதானம் ஆனார். இனிதான் அனிதாவுக்கு நெருப்பாற்றில் நீந்தும் காலம். முன்பெல்லாம் சுரேஷூடன் சண்டை போட்டு, அவரை வில்லனாக்கி விடலாம் என நினைப்பார். இப்போ அவரும் இல்ல…

அன்புள்ள ஆல்கஹாலே… பிக்பாஸ் வீட்டில் வித்தியாசமான கடிதம்!

வெளியே, ’க்க்காலே வெணக்கம்’ என தமிழில் வணக்கம் சொன்னதைக் கிண்டல் செய்திட்டு இருந்தார் ஷிவானி. ஆரிக்கும் பாலாவுக்கும் ஆகாது. அதனால், ஆரி சொன்னதால் காலை வணக்கத்தைக் கிண்டல் செய்தார். (தமிழ் ஆர்வலர்கள் கண்ணில் பட்டால் அவ்வளவுதாம்மா…)

திங்கட்கிழமையில் ஆவலோடு எதிர்பார்க்கும் எவிக்‌ஷனுக்கு நாமினேஷன். ஷனம், அனிதா, சுசித்ரா ஆகியோருக்கு அதிக ஓட்டுகள் விழுந்தன. ரம்யாவுக்கு ஓட்டுகளே விழல. ஆனா, புரோமோவில் ரம்யா பெயரையும் சொன்னார்களே… என ரம்யா ஆர்மி கொந்தளிப்பில் இருக்க… நாமினேஷனுக்கு வீட்டில் உள்ள எல்லோர் பெயரையும் சொல்லி… இந்த வாரம் எவிக்‌ஷன் கிடையாது என லீவ் விட்டார் பிக்கி. (குசும்புதான்)

அன்புள்ள ஆல்கஹாலே… பிக்பாஸ் வீட்டில் வித்தியாசமான கடிதம்!

உடனே காலையில ஒலிக்க விட்ட ‘தீபாவளி… தீபாவளி’ பாட்டை திரும்ப போட்டு ‘இப்போவாது ஒழுங்கா ஆடுங்க’என்பதுபோல எதிர்பார்த்தால் பிக்கி, ‘ம்ஹூம்… அதற்கு வாய்ப்பில்ல… பால்தானே பாஸ் பொங்கும். பச்ச தண்ணி எப்படி பொங்கும்?’

’தீபாவளியை யாருடன் கொண்டாட விரும்புகிறீர்கள்?’என கடிதம் எழுத சொன்னார் பிக்கி. சுசி, இன்னும் அரை நிமிடத்தில் எழுதி முடிச்சே ஆகணும் என்பதுபோல வேக வேகமாக எழுதிட்டு இருந்தார். எல்லோரும் தனித்தனியா உட்கார்ந்து எழுத சம்யுக்தா அழுதுட்டே எழுதினார். ஷிவானி படுத்திட்டு எழுதுவதை புரோமோவில் போட்டிருந்தார்கள். அதையும் சின்ன கவுண்டர்ல செந்தில் படுத்துகிட்ட யோசிக்கிறதையும் சேர்த்து மீம்ஸ் ரெடி பண்ணிட்டாங்க… இதெல்லாம் ரொம்ப ஓவர் தம்பிகளா… ஷிவானி ஆர்மி (இருக்கு பாஸ்) டென்ஷனாயிடுவாங்க.

அன்புள்ள ஆல்கஹாலே… பிக்பாஸ் வீட்டில் வித்தியாசமான கடிதம்!

சென்ற சீசனுக்கு வாங்கிய பிராப்பர்ட்டி வேஸ்ட்டாகிட கூடாதுன்னு ஒரு டாஸ்க் கொடுத்தார் பிக்கி. பெயர்: ’இப்பவே கண்ணைக் கட்டுதே’ அதாவது ஒரு கம்பில் குனிந்து தலையை வெச்சு பத்து தடவை சுத்தி, அப்படியே எதிரே ஓடி, கையைப் பதித்து திரும்ப வரணும்.

ரம்யா, ஷனம் ஆகியோரின் தலைமையில் அணிகள் பிரிக்க, பலரும் கம்பில் சுத்தி முடிந்ததும் ’பொத் பொத்’ வென கீழே விழுந்தார்கள். இறுதியாக ‘ரம்யா’ அணி வென்றது.

அன்புள்ள ஆல்கஹாலே… பிக்பாஸ் வீட்டில் வித்தியாசமான கடிதம்!

பெட்ரூம்க்கு வந்ததும் யார் யார் எப்படி கீழே விழுந்தாங்கன்னு நிஷா, அர்ச்சனா அண்ட் கோ நடித்துக்காட்டி சிரிச்சிட்டு இருந்தாங்க. (சத்தியமா சிரிப்பு வரல… மனசு வருத்தப்படுவயேன்னு சும்மா சிரிச்சேன்னு சந்தானம் டயலாக்தான் ஞாபகத்துக்கு வந்துச்சு)

ரொம்ப ஸ்லோவா… போரிங்கா போய்ட்டு இருந்ததுல இந்த விளையாட்டு பரவாயில்லனு தோணுச்சு. எப்படி இருந்த பிக்பாஸ் வீடு, இப்ப வாழ்ந்து கெட்ட ஜமீன் வீடாட்டம் இருக்கு. சீக்கிரம் ஏதாச்சும் சுவாரஸ்யமா செய்யங்க பாஸ்.

அன்புள்ள ஆல்கஹாலே… பிக்பாஸ் வீட்டில் வித்தியாசமான கடிதம்!

கடிதங்களை ஊருக்கு அனுப்பி, அவங்ககிட்டேயிருந்து பதில் வாங்கி தருவா பிக்கி என நினைத்தால், அந்தக் கடிதத்தைப் படிக்கச் சொன்னார். அதை நேரடியாவே பேச சொல்லிடலாமே… ஓ வித்தியாசமான டாஸ்காமாம். சரி. சரி…

சம்யுக்தா முதலில் வந்ததும் நிச்சயம் ஒரு அழுகை இருக்கு என நினைத்தால், அழகான கடிதத்தைப் படிச்சிட்டு இறங்கிட்டார். இதுக்குதான் அவ்ளோ அழுதீங்களா மேடம்? ‘அன்புள்ள பொண்டாட்டிக்கு…’ என ரமேஷ் எழுதிய கடிதம் இயல்பா இருந்துச்சு. இப்படி ஏதாச்சும் டாஸ்க் கொடுத்து முகத்தைக் காட்டச் சொன்னால்தான் உண்டு போல.

அன்புள்ள ஆல்கஹாலே… பிக்பாஸ் வீட்டில் வித்தியாசமான கடிதம்!

‘ஈழத்து மருமகனாக்கியதற்கு நன்றி’னு நெகிழ்ச்சியோட தம் மனைவிக்கு எழுதிய கடிதத்தைப் படிச்சார் ஆரி. பாலா தம் அம்மாவுக்கு (மறைந்த) எழுதிய கடிதம் ரொம்பவே ஈர்ப்பா இருந்துச்சு.

நிஷாவும், ஆஜித்ம் இஸ்லாமியக் குடும்பம் என்றாலும் தீபாவளி அவர்கள் வீட்டின் ஒரு பண்டிகையாக மாறினதை கடிதங்கள் மூலம் வெளிப்படுத்தினார்கள். ஆயிரம் மத அரசியல் வாதிகள் வந்தாலும் தமிழ்நாடு சமூக ஒற்றுமையில் கெத்தா இருக்கும்.

தம் மகளுக்கு கவிதையாய் கடிதம் எழுதியிருந்தார் அர்ச்சனா. நல்லா இருந்துச்சு மேடம். தம் வீட்டு நாய்க்கு கடிதம் எழுதி கிச்சு கிச்சு மூட்டினார் சோம்ஸ். (கொஞ்சம் கோவம் வந்துச்சு) அம்மாவுக்கு ரொம்ப சுருக்கமான கடிதம் எழுதியிருந்தா ரம்யா. ஷார்ட் அண்ட் ஸ்வீட்.

அன்புள்ள ஆல்கஹாலே… பிக்பாஸ் வீட்டில் வித்தியாசமான கடிதம்!

‘அன்புள்ள ஆல்கஹாலே… உன்னைப் பிரிந்து ஒரு பண்டிகையும் நான் கொண்டாடியதில்லை” என்று ரகளை கூட்டினார் ரியோ. “நீ உள்ளே சென்றதும் அன்பு பல மடங்கு பெருகும்’ என நக்கலோடு எழுதிய கடிதத்தில் அப்படியே மகளை விசாரித்து புத்திசாலித்தனத்தைக் காட்டினார் ரியோ. வாங்க பாஸ் வாங்க. உங்ககிட்ட மக்கள் இன்னும் எதிர்பார்க்கிறாங்க. அடிச்சி விளையாடுங்க. கேதார் ஜாதவ் மாதிரி எப்பவும் டொக் வெச்சிட்டு இருக்காதீங்க. இன்னிக்கு அதகள கடிதம் ரியோதான். இன்னும் சிலர் கடிதம் படிச்சதைக் காட்டல, ‘அதுல ஒண்ணும் இல்ல… கீழ போட்டுடு’ மாதிரி இருந்திருக்கும்போல.

பிக்கியின் பின்கதை சுருக்க வீடியோவில் தீபாவளி கொண்டாட்டம் ஆரம்பித்துவிட்டதாக சொல்லிட்டு இருந்தார். ஆடியன்ஸ் சொன்னது ‘ஆஹான்’

பிக்பாஸ் பற்றிய அப்டேட்மற்றும் கட்டுரைகளைப் படிக்க இங்கே கிளிக் செய்க.