• March
    29
    Sunday

Main Area

Main



சிவகார்த்திகேயனின் ‘கனா’-வை பாராட்டிய சிம்பு!

kana
kana

சென்னை: சிவகார்த்திகேயன் தயாரிப்பில் வெளியாகியுள்ள ‘கனா’ திரைப்படத்திற்கு நடிகர் சிம்பு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில் மகளிர் கிரிக்கெட்டை மையப்படுத்தி வெளியான திரைப்படம் கனா. கடந்த வாரம் வெளியான இப்படத்தை பார்த்த நடிகர் சிம்பு, தொலைப்பேசி மூலம் படக்குழுவை தொடர்புக் கொண்டு தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

kanaa

காவிரி பாசன விவசாயியாக சத்யராஜும், கிரிக்கெட்டில் சாதிக்க வேண்டும் என்ற வைராக்கியத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிப்பில் வெளியான இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

இந்நிலையில், ‘கனா’ படத்தை பார்த்த சிம்பு வியந்து பாராட்டியுள்ளார். நடிகர் சிம்புவிற்கு இயக்குநர் அருண்ராஜா காமராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்

2018 TopTamilNews. All rights reserved.