அரசு கட்டிக் கொடுத்த வீட்டை காணவில்லை… கண்டுபிடிச்சித் தாங்க! – சட்டீஸ்கரில் ஒரு வடிவேலு பட சம்பவம்

 

அரசு கட்டிக் கொடுத்த வீட்டை காணவில்லை… கண்டுபிடிச்சித் தாங்க! – சட்டீஸ்கரில் ஒரு வடிவேலு பட சம்பவம்

வடிவேலு கிணற்றைக் காணவில்லை என்று கூறி அலப்பறை செய்தது போல அல்லாமல் நிஜமாகவே தனக்கு ஒதுக்கப்பட்ட வீட்டைக் காணவில்லை என்று சட்டீஸ்கரில் ஒருவர் போலீசில் புகார் செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சட்டீஸ்கர் மாநிலம் பென்ராவில் பிரதமரின் வீடு கட்டித் தரும் திட்டத்தின் கீழ் இடம் பெற்றவர்களின் பெயர் பட்டியல் வெளியாகி இருந்தது. இதில் சொந்த வீடின்றி அவதியுறும் பலரது பெயரும் இடம் பெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து பாதிக்கப்பட்ட இரண்டு குடும்பங்கள் போலீஸ் உதவியை நாடியுள்ளன. இது குறித்து அவர்கள் கூறுகையில், “நாங்கள் இப்போதும் குடிசை வீட்டில் வசிக்கிறோம். மழை பெய்தால் வீட்டில் ஒழுகுகிறது, வீட்டுக்குள் தண்ணீர் வருகிறது. இந்த நிலையில் பிரதம மந்திரி வீடு கட்டித்தரும் திட்டத்தின் கீழ் எங்களுக்கு வீட்டி கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது. அருகில் உள்ளவர்கள் விளையாட்டாக கூறுகிறார்கள் என்று நினைத்தோம்.

அரசு கட்டிக் கொடுத்த வீட்டை காணவில்லை… கண்டுபிடிச்சித் தாங்க! – சட்டீஸ்கரில் ஒரு வடிவேலு பட சம்பவம்பிறகு பட்டியலை பார்த்தபோதுதான் அதிர்ச்சியடைந்தோம். எங்களுக்குத் தெரியாமல் எங்களுக்கு வீடு கட்டிக் கொடுத்ததாக அந்த பட்டியலில் எங்கள் பெயர்கள் இருந்தன. உண்மையில் அரசு தரப்பிலிருந்து எங்களுக்கு வீடு கட்ட எந்த நிதியும் வழங்கவில்லை, வீட்டைக் கட்டியும் தரவில்லை. இதனால் அரசு வெளியிட்ட பதிவில் குறிப்பிட்டுள்ள அந்த வீடு எங்கே இருக்கிறது என்று கண்டறிந்து தர வேண்டும் என்று போலீசில் புகார் செய்துள்ளோம்” என்றனர்.
இது தொடர்பாக பேசிய மாவட்ட நிர்வாகம், ஊழல் நடந்துள்ளது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஊழலில் ஈடுபட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த விவகாரம் தொடர்பாக முழு அறிக்கையை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்” என்றனர்.