• November
    21
    Thursday

Main Area

MainFirst Exclusive:இரட்டைவேட சினிமாக்களின் கதை.! ஆச்சயமூட்டும் பின்னணி தகவல்..!?

இரட்டைவேடம்
இரட்டைவேடம்

சினிமா பிறந்த போதே இந்த இரட்டை வேடம் மட்டுமல்ல ,மூன்று,நான்கு வேடங்களில் ஒரே நடிகர் நடிக்கும் வழக்கம் பிறந்து விட்டது.அமெரிக்க நடிகரான பஸ்ட்டர் கீட்டன்ல்
(Buster Keaton )என்பவர்,அவர் நடித்த தி பிளே ஹவுஸ் ( the play house ) என்கிற 22 நிமிடம் ஓடக்கூடிய படத்தில் ஐந்து வேடங்களில் நடித்து இந்த ட்ரண்டை துவக்கி வைத்தவர்.நல்ல ராசியான கையாக இருக்க வேண்டும்.
கடந்தவாரம் வெளிவந்த ' பிகில் ' வரை அது தொடர்கிறது.
ஆரம்பத்தில்,நடிகர் பற்றாக்குறையால்தான் இது போன்ற முயற்சியில் இறங்கி இருக்கிறார்கள்.ஆனாமல்,பின்னால் அது ஒரு தைக்கதை உத்தியாகி விட்டது.

ஆதி நாயகன்.

the prisoner of zenda

The prisoner of the zenda என்கிற புகழ் பெற்ற கதையை மட்டும் 1922,1937,1952,1979
 என மீண்டும் மீண்டும் ஹாலிவுட்டில் படமாக்கப்பட்டது. 1984ல் இதை ஆஸ்த்திரேலியர்கள் அனிமேஷன் படமாகவும் செய்திருக்கிறார்கள்.
பிரிசனார் ஆஃப் ஜெண்டா கதை,உங்களுக்கெல்லாம் நன்றாகத் தெரிந்த கதைதான். கெட்டவனான அல்லது,கோமாளியான அரசனை கடத்திவிட்டு அவனைப் போலவே இருக்கும் நல்லவனை வீரனை அந்த இடத்தில் உட்காரவைப்பதுதான் கதை.
கொஞ்சம் கண்ணை மூடிக்கொண்டு யோசித்துப் பாருங்கள் இந்தியாவில் இந்தக் கதையில் நடிக்காத நடிகர் உண்டா.
இந்தக் கதையில் இருக்கும் கவர்ச்சியில் மயங்கி சினிமா மேதைகளில் ஒருவரான அகிரோ குரோசாவே இந்த கதையை தழுவி இருக்கிறார் தெரியுமா.
 
தமிழ் சினிமாவும் ஒன்றும் பிந்தங்கிவிடவில்லை!.

uthamaputhiran

தமிழில் ஹீரோவாக நடிக்கும் எல்லா நடிகர்களுக்கும் இருக்கும் ஆசை இரட்டை வேடத்தில் நடிப்பதுதான்.இதை தமிழில் துவக்கி வைத்தவர் பி.யு சின்னப்பா.1940ல் அவர் நடித்து வெளிவந்த உத்தம புத்திரன் தான் தமிழின் முதல் இரட்டை வேட நாயகனைக் கொண்ட திரைப்படம்.
இதே கதையைத்தான் அதற்கு பதினெட்டு வருடம் கழித்து சிவாஜியை வைத்து அதே பெயரில் 1958ல் எடுத்தார்கள்.அதில்,கோமாளி ராஜாவாக வரும் சிவாஜி பெண்களுடன் ஆடும் ' யாரடி நீ மோகினி' பாப்டல் தலைமுறைகள் தாண்டியும்  ரசிக்கப்படுகிறது.
இப்போது ஷங்கர் தயாரிப்பில் சிம்புதேவன் இயக்கி வடிவேல் நடித்த 23ம் புலிகேசியை இதில் பொருத்திப் பாருங்கள்,மிகச்சரியாக பொருந்தும்.

mgr

எம்.ஜி.ஆரின் நாடோடி மன்னன் பார்த்து இருக்கிறீர்களா.அந்தப் படம் எடுக்கும் போது இது ஓடினால் அவர் மன்னன்,தோற்றால் நாடோடி என்கிற நிலமை.அந்த நெருக்கடியில் எம்ஜிஆர் தேர்ந்தெடுத்ததும் பிரிசனார் ஆஃப் ஜெண்டா கதையைத்தான் அதில் கிடைத்த
வெற்றிக்குப் பிரகு மீண்டும் மீண்டும் இரட்டை வேடப்படங்களாக எடுத்துக் குவித்தார்.
எங்கள் வீட்டுப்பிள்ளையில் ஆரம்பித்து அவரது கடைசி படமான உலகம் சுற்றும் வாலிபன் வரை இந்த ஃபார்முலா அவரைக் கைவிடவே இல்லை.

கமலஹாசன் செய்த அதிரடி.

kamal

கமல் இதே வித்தையைக் கொஞ்சம் மாற்றி ஒரு அய்யோ பாவம் கமல்,ஒரு கெட்ட குள்ளக் கமல் என்று அதற்கு முன்ன்னும் பின்னும் யாரும் துணிந்திராத அபூர்வ சகோதரர்களை எடுத்து மாபெரும் வெற்றி பெற்றார்.
அதற்குப் பிறகு கமலுக்கு கமலே போட்டியாகிவிட,நான்கு வேடங்களில் அபூர்வ சகோதரர்கள், பத்து வேடங்களில் தசாவதாரம் என்றெல்லாம் எடுக்க வேண்டி வந்தது.
அபூர்வசகோதரர்கள் என்கிற தலைப்பில் 1949ல் எம்.கே ராதா நடித்த ஒரு திரைப்படம் வந்திருக்கிறது. அதைத்தான் எம்ஜிஆர் நீரும் நெருப்பும் என்று 1971ல் எடுத்தார்.அதுவும் பிரிசனர் ஆஃப் ஜெண்டா பாணி கதைதான்.

rajini

ரஜினியின் மூன்று முகம்,பில்லா போன்ற படங்கள் வெற்றிக்கொடி நாட்டினாலும் அவர் நடித்து கன்னட நடிகர் ரவிச்சந்திரன் இயக்கிய அதிசயப் பிறவி அடிவாங்கியதால் கொஞ்ச காலம் அந்த வகைப் படங்கள் வருவது குறைந்தது.

villan

அவர்களுக்குப் பிறகு அஜித் குமார் நடித்த வாலி,வில்லன் படங்கள் வெற்றி பெற,மீண்டும் சூடு பிடித்த பிரிசனர் ஆஃப் ஜெண்டா விஸ்வாசம் ,பிகில் என்று இன்னும் தொடர்கிறது.

கடைசியாக இரண்டு அதிசயப் பிறவிகள்,

vijay

இந்திய சினிமாவிலேயே அதிக இரட்டை வேடப்படங்கள் செய்த்தவர் என்.டி.ஆர்.
அதே போல இந்திய நடிகர்களிலேயே ஒரே படத்தில் அதிக வேடங்கள் செய்தவர் ஒரு வில்லன்!.
1950ம் ஆண்டு வெளிவந்த திகம்பரசாமியார் என்கிற திரைப்படத்தில் 11 வேடங்களில் நடித்த எம்.என் நம்பியாரின் ரெக்கார்டு இன்னும் இந்திய அளவில் முறியடிக்கப்படாமலே இருக்கிறது.
அனேகமாக,உலக சினிமாவிலேயே எட்டி மர்ஃபிகும்(   Eddie Murphy) நம்பியாருக்கும்தான் இதில் போட்டி என்று தோன்றுகிறது.

2018 TopTamilNews. All rights reserved.