Home விளையாட்டு கிரிக்கெட் சென்னையில் புயல் – அக்கறையோடு விசாரிக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டர்!

சென்னையில் புயல் – அக்கறையோடு விசாரிக்கும் ஆஸ்திரேலிய கிரிக்கெட்டர்!

சென்னையில் கடுமையான மழை பெய்து வருகிறது. நிவர் புயல் அறிவிப்புகள் இரு நாட்களாகவே தொடர்ச்சியாக ஊடகங்களில் இடம்பிடித்து உள்ளது. இந்நிலையில் சென்னையின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் செம்பரம்பாக்கம் எரி நிரம்பி வருவதால், அதை இன்று மதியம் 12 மணிக்குத் திறந்திவிட்டிருக்கிறார்கள்.

சென்னையில் மட்டுமல்ல, வட தமிழ்நாடு முழுவதுமே பரவலாக மழை பெய்து வருகிறது. நாளை விடியற்காலையில் புதுச்சேரி அருகே நிவர் புயர் கரையைக் கடக்கும் என வானிலை அதிகாரிகள் கூறிவருகின்றனர்.

இதனால் சென்னையில் உள்ளவர்களை தமிழ்நாட்டின் பல ஊர்களிலிருந்தும் நலம் விசாரித்து வருகிறார்கள். இந்நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் சென்னை புயல் பற்றி அறிந்து அக்கறையும் தனது இன்ஸ்ட்ராகிராமில் பதிவிட்டு உள்ளார்.

டேவிட் வார்னர் ஆஸ்திரேலிய அணியின் மிக முக்கியமான வீரர். இந்தியாவின் ஐபிஎல் தொடரில் தொடர்ந்து ஆடி வருபவர். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன். அதற்காக சென்னைக்குப் போட்டியில் ஆட வருபவர். தமிழ்நாட்டைச் சேர்ந்த பவுலர் நடராஜனை ஊக்கமளித்து, நிறைய வாய்ப்புகள் அளித்தவர். ஆஸ்திரேலியாவுக்கு இந்திய அணியில் நடராஜன் தேர்வானது வாழ்த்துகள் தெரிவித்தவர்.

இப்போது சென்னை மாநகரில் இருக்கும் மக்கள் எப்படி இருக்கிறீர்கள். பத்திரமாக இருப்பீர்கள் என நம்புகிறேன் என்று தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதை அவரின் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

மாவட்ட செய்திகள்

Most Popular

‘கோவாக்சின் விநியோகத்திற்கு என்ன அவசரம்? செஞ்சோற்றுக் கடனா?’ – திருமாவளவன் ட்வீட்!

மூன்றாம் கட்ட பரிசோதனை முடியாமலேயே கோவாக்சின் மருந்து விநியோகம் செய்யப்பட்டது ஏன்? என விடுதலை சிறுத்தைக் கட்சித் தலைவர் திருமாவளவன் கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக...

வன கோயிலில் பொங்கல் வைத்து வழிபட்ட மக்கள்… மழை வேண்டி வன விலங்கு சிலைகளுக்கும் பிரார்த்தனை…

ஈரோடு கோபி அருகே மாட்டுப் பொங்கலையொட்டி வனப்பகுதியில் அமைந்துள்ள நவக்கிணறு மாதேஸ்வரன் கோயிலில் களிமண்ணால் ஆன கால்நடைகள் மற்றும் வன விலங்குளின் உருவங்களை வைத்து பொதுமக்கள்...

புதுச்சேரியில் கொரோனா தடுப்பூசி பணியை தொடக்கி வைத்தார் முதல்வர்!

நாடு முழுவதும் 3,000 மையங்களில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கிவிட்டது. எல்லா இடங்களிலுமே முன்களப்பணியாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. கொரோனா தடுப்பூசி போடும் பணியை காணொளி...

‘எனக்கு பாலாவை பிடிக்கும் ப்ரோ’ – பிக் பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய கேபியின் லைவ் வீடியோ!

பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய கேப்ரியலா சமூக வலைதளத்தில் ரசிகர்களுடன் நேற்று உரையாடினார். பிக் பாஸ்...
Do NOT follow this link or you will be banned from the site!