புயல் பாதிப்பு: தமிழகத்திற்கு ரூ.286 கோடி நிதி ஒதுக்கீடு!

 

புயல் பாதிப்பு: தமிழகத்திற்கு ரூ.286 கோடி நிதி ஒதுக்கீடு!

தமிழகத்தில் கடந்த ஆண்டு மாதத்தில் அடுத்தடுத்து உருவான நிவர் மற்றும் புரவி புயல்கள் பல்வேறு மாவட்டங்களில் கடும் பாதிப்பை ஏற்படுத்திவிட்டுச் சென்றது. கிட்டத்தட்ட 7 லட்சம் ஏக்கர் நிலங்கள் இந்த புயல்களால் சேதமடைந்தன. நிவர் புயல் பாதிப்புகளை சீரமைக்க 3,750 கோடியும், புரவி புயல் பாதிப்புகளை சீரமைக்க 1,514 கோடியும் தேவைப்படுவதாக தமிழக அரசு தரப்பில் மத்திய அரசிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

புயல் பாதிப்பு: தமிழகத்திற்கு ரூ.286 கோடி நிதி ஒதுக்கீடு!

அதன் படி, புயல் பாதிப்புகளை ஆய்வு செய்ய 6 அதிகாரிகள் கொண்ட குழுவை மத்திய அரசு தமிழகத்திற்கு அனுப்பியது. 2 நாட்கள் நிவர் புயல் பாதிப்பையும், 3 நாட்கள் புரவி புயல் பாதிப்பையும் ஆய்வு செய்த மத்தியக் குழு டெல்லி சென்றது. இதைத் தொடர்ந்து கடந்த ஜனவரி மாதம், எதிர்பாராத வகையில் பல்வேறு மாநிலங்களில் மழை கொட்டித் தீர்த்தது. இதில் சுமார் 16.8 லட்சம் ஏக்கர் விளைநிலங்கள் சேதம் அடைந்தன.

புயல் பாதிப்பு: தமிழகத்திற்கு ரூ.286 கோடி நிதி ஒதுக்கீடு!

இந்த நிலையில், நிவர் மற்றும் புரவி புயல் பாதிக்கப்பட்ட தமிழகத்திற்கு மத்திய அரசு ரூ.286 நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. நிவர் புயலுக்கு ரூ.63 கோடியும் புரவி புயலுக்கு ரூ.223 கோடியும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடந்த உயர்மட்டக்குழு கூட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட 5 மாநிலங்களுக்கு மொத்தம் ரூ.3,113 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.