மீண்டும் புயல் : தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் !

 

மீண்டும் புயல் : தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் !

அடுத்த 12 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாகவுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் என்றும், இது அடுத்த 24மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 12 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாவதால் டிச.1 மற்றும் 2ம் தேதி தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

மீண்டும் புயல் : தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் !

அதே சமயம் 29 ஆம் தேதியன்று மத்திய வங்க கடலில் உருவாகும் புயல் காரணமாக தமிழகத்தில் அதிக கன மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை மைய இயக்குனர் ஜெனரல் மிருந்துஞ்சை அறிவித்துள்ளார். இது டிசம்பர் 2 ஆம் தேதி நாகப்பட்டினம் அருகே கரையை கடக்கும் என்றும் தகவல் தெரிவித்துள்ளார்.

மீண்டும் புயல் : தமிழகத்திற்கு ஆரஞ்சு அலர்ட் !

இதனால் மீனவர்கள் டிசம்பர் 3ஆம் தேதி வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த 21 ஆம் தேதி வங்கக்கடலில் உருவான நிவர் புயலால் பலத்த மழை பெய்த நிலையில் மீண்டும் புயல் உருவாக வாய்ப்பு உள்ளதாக கூறியுள்ளது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது .