ஈரோடு கடையில் பயங்கர தீ விபத்து : பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசம்!

ஈரோடு கடையில் பயங்கர தீ விபத்து : பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசம்!

ஈரோடு மாவட்டம் பெருந்துறை உழவர் நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி. 80 வயதான இவர் திருமண நிகழ்ச்சிக்கு தேவையான பந்தல், டேபிள் சேர் வாடகை விடும் கல்யாணம் ஸ்டோர் கடை ஒன்றை நடத்தி வந்துள்ளார்.

இந்த கடையானது சுற்றிலும் தகரம், மேற்கூரை ஓலையில் வேயப்பட்டு இருந்த இந்த கடைக்குள் 2 லட்சம் மதிப்பிலான மூங்கில், பந்தல் உள்ளிட்ட பொருட்களும் 3 லட்சம் மதிப்பிலான டேபிள் சேர் உள்ளிட்ட பொருட்களும் இருந்துள்ளன.

ஈரோடு கடையில் பயங்கர தீ விபத்து : பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசம்!
இந்நிலையில் நேற்றிரவு இந்த கடையில் திடீரென தீப்பற்றி உள்ளது. இதை கண்ட அக்கம்பக்கத்தினர் தீயை அணைக்க முயற்சித்தும் பலனில்லை. இதைத்தொடர்ந்து தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ கட்டுக்கடங்காமல் பரவ தொடங்கியதால் சென்னிமலை மற்றும் ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.

ஈரோடு கடையில் பயங்கர தீ விபத்து : பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் நாசம்!

இதைத்தொடர்ந்து அங்கு வந்த தீயணைப்பு துறை குழுக்கள் சுமார் 2 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டுவந்தனர். இந்த விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகி உள்ளன.