தனியார் பால் நிறுவனத்தின் விலை உயர்வை தடுத்து நிறுத்தவும் – பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை!

 

தனியார் பால் நிறுவனத்தின் விலை உயர்வை தடுத்து நிறுத்தவும் – பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை!

தமிழகத்தின் பால் விற்பனையில் தனியார் பால் நிறுவனங்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. இருப்பினும் தமிழகத்தில் ஆவின் பால் தான் அதிக அளவில் விற்பனை ஆகிறது. இதனிடையே தனியார் பால் நிறுவனங்கள் தொடர்ந்து விலை உயர்வை அறிவித்து வருகின்றன. இந்த நிலையில், ஆந்திராவை சேர்ந்த தனியார் பால் நிறுவனமான “டோட்லா பால்” நிறுவனம் ஒரு லிட்டருக்கு ரூ.7.57 காசுகள் உயர்த்தி இருப்பதை கண்டித்து தமிழ்நாடு பால் முகவர்கள் சங்கம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

தனியார் பால் நிறுவனத்தின் விலை உயர்வை தடுத்து நிறுத்தவும் – பால் முகவர்கள் சங்கம் கோரிக்கை!

அதில், “டோட்லா பால்” நிறுவனம் பால் முகவர்களுக்கு எந்தவிதமான சுற்றறிக்கையும் வழங்காமல் பால் முகவர்களின் தயிர் கொள்முதல் விலையை இன்று (18.06.2020) அதிகாலை முதல் லிட்டருக்கு 7ரூபாய், 57காசுகள் உயர்த்தியுள்ளது. ஆனால் இந்த விலை உயர்வானது பொதுமக்கள் தலையில் மறைமுக விற்பனை விலை உயர்வாக திணிக்கப்பட்டுள்ளதற்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம்.

தற்போது கொரோனா பெருந்தொற்று காரணமாக பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கினால் வணிகம் சார்ந்த பால் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதை சுட்டிக் காட்டி பால் கொள்முதல் விலையை தனியார் பால் நிறுவனங்கள் லிட்டருக்கு 15.00ரூபாய் முதல் 20.00ரூபாய் வரை குறைத்து விட்டன. இந்நிலையில் டோட்லா பால் நிறுவனம் 160கிராம் எடையுள்ள தயிர் பாக்கெட்டை தற்போது 140கிராம் என அளவை குறைத்து நேற்று (17.06.2020) வரை ஒரு லிட்டர் தயிர் 53.15ஆக வழங்கியதை அதுவே இன்று (18.06.2020) அதிகாலை முதல் ஒரு லிட்டர் 60.72 என நிர்ணயம் செய்து பால் முகவர்களிடமிருந்து தொகையை வசூலித்துள்ளது.

160கிராம் தயிர் பாக்கெட் அளவை 140கிராம் என குறைத்து பொதுமக்களுக்கு மறைமுகமாகவும், பால் முகவர்களுக்கு நேரிடையாகவும் விலை உயர்வை திணித்துள்ளது. இது போன்ற நிகழ்வுகள் நடைபெறுவது தொடர்கதையாக இருப்பதால் தமிழக அரசு இவ்விஷயத்தில் உடனடியாகத் தலையிட்டு தனியார் பால் நிறுவனங்களை கட்டுப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் வலியுறுத்துகிறோம். ” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.