உற்பத்தி விரிவாக்கம் நிறுத்தம் ? – தகவலுக்கு டொயோட்டா மறுப்பு-2 ஆயிரம் கோடி முதலீடு செய்ய உள்ளதாக அறிவிப்பு

உற்பத்தி விரிவாக்கம் நிறுத்தம் ? – தகவலுக்கு டொயோட்டா மறுப்பு-2 ஆயிரம் கோடி முதலீடு செய்ய உள்ளதாக அறிவிப்பு

அதிகப்படியான வரி உயர்வு காரணமாக இந்தியாவில் உற்பத்தி விரிவாக்கத்தை டொயோட்டா நிறுத்தப்போவதாக வெளியான தகவலை அந்நிறுவனம் மறுத்துள்ளது.

உற்பத்தி விரிவாக்கம் நிறுத்தம் ? – தகவலுக்கு டொயோட்டா மறுப்பு-2 ஆயிரம் கோடி முதலீடு செய்ய உள்ளதாக அறிவிப்பு

கடந்த சில தினங்களுக்கு முன்பு, டொயோட்டா நிறுவனத்தின் இந்திய பிரிவு துணைத்தலைவர் சேகர் விஸ்வநாதன், ”நீங்கள் வேண்டாம் என கூறும் வகையில் வாகனங்களுக்கான வரியை அரசு தொடர்ந்து உயர்த்தி வருவதாகவும் இதனால், டொயோட்டா நிறுவனம் உற்பத்தி விரிவாக்கத்தை நிறுத்தப்போவதாகவும் தெரிவித்து இருந்தார்.

உற்பத்தி விரிவாக்கம் நிறுத்தம் ? – தகவலுக்கு டொயோட்டா மறுப்பு-2 ஆயிரம் கோடி முதலீடு செய்ய உள்ளதாக அறிவிப்பு

இந்நிலையில், அந்நிறுவனத்தின் துணைத்தலைவர் விக்ரம் கிர்லோஸ்கர், இந்த கருத்தை மறுத்துள்ளார். மேலும் அடுத்த 12 மாதங்களில் நிறுவனம், கூடுதலாக 2 ஆயிரம் கோடி ரூபாயை இந்தியாவில் முதலீடு செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார்.

உற்பத்தி விரிவாக்கம் நிறுத்தம் ? – தகவலுக்கு டொயோட்டா மறுப்பு-2 ஆயிரம் கோடி முதலீடு செய்ய உள்ளதாக அறிவிப்பு

இதே தகவலை டொயோட்டா நிறுவனத்தின் தலைவர், மசகஷூ யோஷிமுராவும் உறுதிப்படுத்தி உள்ளார். ”இந்தியாவில் வளர்ச்சி- இந்தியாவுடன் இணைந்த வளர்ச்சி” என்ற திட்டத்துடன் இணைந்து 20 ஆண்டுகளாக பயணித்து வரும் டொயோட்டா நிறுவனம், வரும் ஆண்டில் 2 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

-எஸ். முத்துக்குமார்