திருடுபோன வெளிநாட்டு நாய் – சிசிடிவி மூலம் மீட்ட தொழிலதிபர் குடும்பம்

 

திருடுபோன வெளிநாட்டு நாய் – சிசிடிவி மூலம் மீட்ட தொழிலதிபர் குடும்பம்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே திருடுபோன தொழிலதிபரின் வெளிநாட்டு நாய், சிசிடிவி கேமரா பதிவு மூலம் மீட்கப்பட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஓமலூர் கடைவீதி பகுதியை சேர்ந்தவர் தொழிலதிபர் குட்டி.
சில மாதங்களுக்கு முன்பு வெளிநாட்டு நாய் ஒன்றை வாங்கி, வீட்டில் செல்லமாக வளர்த்து வந்துள்ளார்.

திருடுபோன வெளிநாட்டு நாய் – சிசிடிவி மூலம் மீட்ட தொழிலதிபர் குடும்பம்

நாள்தோறும் காலை மற்றும் மாலை வேளைகளில் நாயுடன் வாக்கிங் செல்வதை வழக்கமாக கொண்டிருந்துள்ளார். இந்நிலையில் கடந்த 19ஆம் தேதி மாலை வீட்டின் வாசலின் நின்றிருந்த நாய் திடீரென மாயமாகி உள்ளது. இதனால், அதிர்ச்சியடைந்த குட்டி, நாய் மாயமானது குறித்து தனது குடும்பத்தினரை கடிந்து கொண்டுள்ளார். இந்நிலையில், நாயை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கிய குட்டியின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஓமலூர் பகுதியில் தெருத்தெருவாக சென்று தேடியுள்ளனர்.

ஆனால் நாய் கிடைக்காத சூழலில், வீட்டுக்கு வாசலில் இருந்த சிசிடிவி காமிராவை பார்த்துள்ளனர். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர், நாய்க்குட்டியை திருடிச் சென்றது தெரியவந்தது.

திருடுபோன வெளிநாட்டு நாய் – சிசிடிவி மூலம் மீட்ட தொழிலதிபர் குடும்பம்

சிசிடிவி அடையாளத்தை வைத்து விசாரித்தபோது அவர், ஓமலூர் பேருந்து நிலையம் அருகே வசிப்பவர் என தெரியவந்தது. பின்னர் அந்த இளைஞரின் வீட்டுக்கு குட்டியும், அவரது உறவினர்களும் சென்று, தங்களது நாய் திருடுபோய் விட்டதாகவும், உயிருக்கு உயிராக வளர்த்த அந்த நாய்க்குட்டியை கொடுத்துவிடுமாறும் கண்ணீர் மல்க கேட்டுக்கொண்டார். இதனால் மனம் மாறிய அந்த இளைஞர், நாய் தெருவில் விளையாடிக் கொண்டிருந்ததால் எடுத்துவந்தாக கூறி, மன்னிப்பு கேட்டுகொண்டார்.

பின்னர் குட்டியும், அவரது உறவினர்களும் நாய்க்குட்டியை வீட்டிற்கு எடுத்துச் சென்றனர்.