ஆக்சிஜன் உற்பத்தியை நிறுத்திவிட்டோம்! ஆனால் இதை மட்டும் செய்யுங்க- ஸ்டெர்லைட்

 

ஆக்சிஜன் உற்பத்தியை நிறுத்திவிட்டோம்! ஆனால் இதை மட்டும் செய்யுங்க- ஸ்டெர்லைட்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் உச்ச நீதிமன்றம் ஆக்சிசன் தயாரிப்பு பணிகளுக்கு ஜூலை 31-ம் தேதி வரையில் அனுமதி வழங்கி இருந்த நிலையில் இன்றுடன் ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக ஆலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் பராமரிப்பு பணிக்காக 2 மெகாவாட் மின்சாரம் வழங்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

ஆக்சிஜன் உற்பத்தியை நிறுத்திவிட்டோம்! ஆனால் இதை மட்டும் செய்யுங்க- ஸ்டெர்லைட்

கொரோனா தொற்று பாதிப்பு காரணமாக தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி செய்து அரசு மருத்துவமனைகளுக்கு இலவசமாக வழங்க அனுமதி வழங்க வேண்டும் என ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகம் தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில் உச்ச நீதிமன்றம் தூத்துக்குடி ஸ்டெர்லைட் தொழிற்சாலையில் ஏப்ரல் 27-ம் தேதி முதல் ஜூலை 31-ம் தேதி வரை மொத்தம் 4-மாதங்கள் ஆக்சிசன் உற்பத்தி செய்ய அனுமதி வழங்கிய நிலையில் கடந்த மே மாதம் முதல் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கப்பட்டது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் கடந்த 4-மாதத்தில் 2132 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டி நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், தேனி, கன்னியாகுமரி தென்காசி உள்ளிட்ட அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

ஆக்சிஜன் உற்பத்தியை நிறுத்திவிட்டோம்! ஆனால் இதை மட்டும் செய்யுங்க- ஸ்டெர்லைட்

இந்நிலையில் நாளையுடன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் கால அவகாசம் நிறைவு பெறுவதை தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் இன்று தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் மீண்டும் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய 6 மாதங்கள் அவகாசம் கேட்டு நிர்வாகம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது தமிழக அரசு தற்போது கொரோனா தொற்று பாதிப்பு ஏதுமில்லை, ஆக்சிஜன் தேவைப்படவில்லை, அதனால் ஆலையில் உற்பத்தி செய்ய அனுமதி வழங்க வேண்டாம் என வாதிட்டது. இதனையடுத்து வரும் 6ஆம் தேதிக்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இன்று முதல் ஆக்சிஜன் உற்பத்தி நிறுத்தப்பட்டு உள்ளதாகவும், மேலும் பராமரிப்பு பணிக்காக 2 மெகாவாட் மின்சாரத்தை தமிழக அரசு வழங்க வேண்டும் எனவும் ஸ்டெர்லைட் ஆலை தரப்பில் அறிக்கை மூலம் தெரிவித்துள்ளனர்.