ஸ்டெர்லைட்டில் ஒரேநாளில் 28.12 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி!

ஸ்டெர்லைட்டில் ஒரேநாளில் 28.12 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி!

தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையில் மருத்துவரீதியான ஆக்சிஜன் 4 மாதங்களுக்கு தயாரிக்க தமிழக் அரசு அனுமதி அளித்த நிலையில், கொரோனா சிகிச்சை பணிகளுக்கு தேவைப்படும் ஆக்சிஜன் உற்பத்தி நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக 5 ஆயிரம் லிட்டர் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு திருநெல்வேலி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஸ்டெர்லைட்டில் ஒரேநாளில் 28.12 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி!

இந்த சூழலில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் நேற்று ஒரே நாளில் 28.12 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்பட்டு தூத்துக்குடி, சிவகங்கை, தேனி, திருநெல்வேலி மாவட்ட அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் தெரிவித்துள்ளார்.