ஸ்டெர்லைட் ஆலை… ஆட்சியர் தலைமையில் கண்காணிப்புக் குழு அமைப்பு!

 

ஸ்டெர்லைட் ஆலை… ஆட்சியர் தலைமையில் கண்காணிப்புக் குழு அமைப்பு!

நாடு முழுவதும் ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட வேதாந்தா நிறுவனம், ஸ்டெர்லைட் ஆலையை திறக்க கோரி அனுமதி கோரியது. ஆலையை திறக்க அனுமதிக்குமாறு உச்சநீதிமன்றமும் அரசுக்கு பரிந்துரைத்தது. அதன் பேரில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி முதல்வர் பழனிசாமி, கட்சிகளின் ஒப்புதலின் பேரில் 4 மாதங்களுக்கு தற்காலிகமாக ஆலையை திறக்க அனுமதி அளித்தார்.

ஸ்டெர்லைட் ஆலை… ஆட்சியர் தலைமையில் கண்காணிப்புக் குழு அமைப்பு!

ஆனால், ஸ்டெர்லைட் ஆலையால் பாதிக்கப்பட்ட மக்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஸ்டெர்லைட் ஆலையின் சுற்றுவட்டார கிராம மக்கள் கருப்புக்கொடி ஏற்றி நேற்று போராட்டத்திலும் ஈடுபட்டனர். இருப்பினும், மக்களின் எதிர்ப்புகளை மீறி நேற்று ஸ்டெர்லைட் ஆலை திறக்கப்பட்டது. இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி அளித்திருப்பது தொடர்பாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலை… ஆட்சியர் தலைமையில் கண்காணிப்புக் குழு அமைப்பு!

அதில், ஸ்டெர்லைட் ஆலையின் செயல்பாடு தொடர்பாக இரண்டு வாரத்துக்கு ஒருமுறை அறிக்கை தர வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் உற்பத்தியை கண்காணிக்க தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தலைமையில் 6 பேர் கொண்ட குழு அமைத்து உத்தரவிட்டுள்ளது.