தூத்துக்குடியில் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்திய ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி நடத்திய போராட்டத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். இதனால் ஆலைக்கு தமிழக அரசு சீல் வைத்தது. இதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வேதாந்தா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.
இந்த வழக்கின் மீதான தீர்ப்பில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான தடை தொடரும் என இன்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், பொதுமக்களும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை அனுமதிக்கக் கோரிய வழக்கில் சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை தூத்துக்குடி திமுக எம்பி கனிமொழி வரவேற்பு தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி ஸ்டர்லைட் ஆலையை மீண்டும் திறக்க சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி மறுத்துள்ளது.
சுற்றுச்சுழலை விலையாக கொடுத்து கிடைக்கும் வளர்ச்சி ஆபத்தானது என்பதை இத்தீர்ப்பு உணர்த்துகிறது.#Sterlite
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) August 18, 2020
இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் , “சுற்றுச்சூழலை விலையாக கொடுத்து கிடைக்கும் வளர்ச்சி ஆபத்தானது என்பதை ஸ்டெர்லைட் ஆலை வழக்கின் தீர்ப்பு உணர்த்துகிறது” என்றும் திமுக இந்த தீர்ப்பை வரவேற்பதாகவும் கூறியுள்ளார்.