ஸ்டெர்லிங் அண்டு வில்சன் சோலார் நிறுவனத்தின் லாபம் ரூ.17 கோடியாக சரிவு

ஸ்டெர்லிங் அண்டு வில்சன் சோலார் நிறுவனத்தின் லாபம் ரூ.17 கோடியாக சரிவு

2020 ஜூன் காலாண்டில் ஸ்டெர்லிங் அண்டு வில்சன் சோலார் நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.17.22 கோடி ஈட்டியுள்ளது.

ஸ்டெர்லிங் அண்டு வில்சன் சோலார் நிறுவனம் தனது கடந்த ஜூன் காலாண்டு நிதி முடிவுகளை வெளியிட்டுள்ளது. 2020 ஜூன் காலாண்டில் ஸ்டெர்லிங் அண்டு வில்சன் சோலார் நிறுவனம் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபமாக ரூ.17.22 கோடி ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் 62 சதவீதம் குறைவாகும்.

ஸ்டெர்லிங் அண்டு வில்சன் சோலார் நிறுவனத்தின் லாபம் ரூ.17 கோடியாக சரிவு
சோலார்

2020 ஜூன் காலாண்டில் ஸ்டெர்லிங் அண்டு வில்சன் சோலார் நிறுவனம் மொத்த வருவாயாக ரூ.1,099.38 கோடி ஈட்டியிருந்தது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டைக் காட்டிலும் குறைவாகும். கடந்த காலாண்டில் அந்நிறுவனத்தின் வருவாய் சரிந்ததால் லாபமும் வீழ்ச்சி கண்டுள்ளது.

ஸ்டெர்லிங் அண்டு வில்சன் சோலார் நிறுவனத்தின் லாபம் ரூ.17 கோடியாக சரிவு
ஸ்டெர்லிங் அண்டு வில்சன் சோலார் நிறுவனம்

2019 ஜூன் காலாண்டில் ஸ்டெர்லிங் அண்டு வில்சன் சோலார் நிறுவனத்தின் ஒட்டு மொத்த அளவில் நிகர லாபம் ரூ.46.01 கோடியாகவும், மொத்த வருவாய் ரூ.1,309.34 கோடியாகவும் உயர்ந்து இருந்தது. மும்பை பங்குச் சந்தையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று வர்த்தகத்தின் முடிவில் ஸ்டெர்லிங் அண்டு வில்சன் சோலார் நிறுவன பங்கின் விலை ரூ.4.10 குறைந்து ரூ.219.65ல் முடிவுற்றது.