ஆவி பிடித்தால் சுவாச பிரச்னை நீங்கும்… சென்னை சென்ட்ரல் போலீசாரின் புதிய முயற்சி!

ஆவி பிடித்தால் சுவாச பிரச்னை நீங்கும்… சென்னை சென்ட்ரல் போலீசாரின் புதிய முயற்சி!

தமிழகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரும் சூழலிலும், மக்கள் முறையாக கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாததால் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரிக்கிறது. இதனால், பாதிப்பை கட்டுப்படுத்தும் நோக்கில் பலர் களமிறங்கியுள்ளனர்.

ஆவி பிடித்தால் சுவாச பிரச்னை நீங்கும்… சென்னை சென்ட்ரல் போலீசாரின் புதிய முயற்சி!

அந்த வகையில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலைய போலீசார், நீராவி பிடிப்பதற்கான ஏற்பாடுகளை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் மேற்கொண்டுள்ளனர். அங்கு மொத்தமாக 10 ஆவி பிடிக்கும் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு முறை மக்கள் பயன்படுத்திய பிறகும் அவை கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்படுகிறது. வேம்பு, துளசி, மஞ்சள், கற்பூரவள்ளி உள்ளிட்ட மூலிகைகள் கொண்டு ஆவி பிடிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஆவி பிடித்தால் சுவாச பிரச்னை நீங்கும்… சென்னை சென்ட்ரல் போலீசாரின் புதிய முயற்சி!

ஆவி பிடிப்பதால் சுவாசக் கோளாறுகள் நீங்கும் என இயற்கை மருத்துவர்கள் அறிவுறுத்தி வரும் நிலையில் காவல்துறை இந்த புதிய முயற்சியில் ஈடுபட்டிருப்பது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. பயணிகள் கொடுக்கும் வரவேற்பை பொறுத்து ரயில் நிலையங்களிலும் இந்த திட்டம் விரிவுபடுத்தப்படும் என எஸ்.பி பழனிக்குமார் தெரிவித்துள்ளார்.