ஓராண்டாக வீட்டுக்குள்ளேயே இருந்தும் கொரோனா – அதிர்ச்சியில் எழுத்தாளர் போட்ட ட்வீட்!

 

ஓராண்டாக வீட்டுக்குள்ளேயே இருந்தும் கொரோனா – அதிர்ச்சியில் எழுத்தாளர் போட்ட ட்வீட்!

ங்கதேசத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர் எழுத்தாளர் தஸ்லீமா நஸ்ரின். இவர் இஸ்லாமிய மதத்துக்கு எதிரான கருத்துக்களை எழுதி வந்ததார். இதனால் ஆத்திரமடைந்த அந்நாட்டின் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் அவருக்குக் கொலை மிரட்டல் விடுத்தனர். உயிருக்குப் பயந்து 1994 ஆம் ஆண்டு வங்கதேசத்தை விட்டு வெளியேறிய தஸ்லிமா அமெரிக்கா, ஐரோப்பியா நாடுகளில் தஞ்சமடைந்து வாழ்ந்து வந்தார்.

ஓராண்டாக வீட்டுக்குள்ளேயே இருந்தும் கொரோனா – அதிர்ச்சியில் எழுத்தாளர் போட்ட ட்வீட்!

பின்னர் ஸ்வீடன் நாட்டு குடியுரிமை பெற்ற தஸ்லிமா 2004ஆம் ஆண்டு முதல் டெல்லியில் வசித்து வருகிறார். இச்சூழலில் அவருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக ட்வீட் செய்துள்ளார். இதுகுறித்து அவர் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், “கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதலே வீட்டிலேயே தனியாக தான் இருக்கிறேன். யாரையும் நான் வீட்டிற்குள் அனுமதிப்பதே இல்லை. நானும் எங்கும் வெளியே செல்வதில்லை.

என் வளர்ப்புப் பூனை தான் எனக்கு துணை. சமைத்தல், வீட்டை சுத்தம் செய்தல் ஆகியவற்றில் ஈடுபட்டேன். ஒரு ஆண்டுக்கும் மேலாக வீட்டிலேயே இருந்தும் எனக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இது மிகவும் ஆச்சரியமாக உள்ளது. ஒரு ஆண்டாக வீட்டிலேயே இருந்தும் எனக்கு எப்படி கரோனா தொற்று ஏற்பட்டது என்பதை தெரிந்து கொள்ள ஆவலாக இருக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.