வீட்டிலிருந்தே சர்வதேச யோகா தினத்தை கடைபிடியுங்கள் – பிரதமர் மோடி

 

வீட்டிலிருந்தே சர்வதேச யோகா தினத்தை கடைபிடியுங்கள் – பிரதமர் மோடி

டெல்லி: இந்தாண்டு மக்கள் தங்கள் வீட்டிலிருந்தபடியே சர்வதேச யோகா தினத்தை கடைபிடிக்குமாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச யோகா தினம் (International Yoga Day) ஜூன் 21-ஆம் நாள் கொண்டாடப்படும் என ஐக்கிய நாடுகள் சபை கடந்த 2014-ஆம் ஆண்டு அறிவித்தது. 5000 ஆண்டுகள் பழைமை வாய்ந்த யோகா கலையின் பெருமையை உலகம் முழுவதும் பரவச் செய்யும் வகையில் சர்வதேச யோகா தினம் என்று ஒவ்வொரு ஆண்டும் ஏதாவது ஒரு நாள் கடைபிடிக்கப்பட வேண்டும் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 2014-ஆம் ஆண்டு ஐநா சபையில் வலியுறுத்தினார். இதைத் தொடர்ந்தே சர்வதேச யோகா தினம் உருவானது.

ஆனால் இந்தாண்டு உலகம் முழுக்க கொரோனா பீதியால் மக்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர். இந்தியாவிலும் பொதுமுடக்கம் காரணமாக யோகா தினத்தை கொண்டாடுவதில் சிக்கல் நிலவுகிறது. இந்த நிலையில், இந்தாண்டு மக்கள் தங்கள் வீட்டிலிருந்தபடியே சர்வதேச யோகா தினத்தை கடைபிடிக்க வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார். கொரோனா தொற்றுநோயால் நமது உற்சாகம் பாதிக்கப்படக் கூடாது. இந்தாண்டு யோகா தினத்தை வீட்டிலிருந்தபடியே குடும்பத்தினருடன் சேர்ந்து யோகா செய்வோம் என்று குறிப்பிட்டுள்ளார்.