கொரோனா ஆக்டிவ் கேஸஸ் பட்டியலில் தமிழகம் எந்த இடத்தில் இருக்கு தெரியுமா?

 

கொரோனா ஆக்டிவ் கேஸஸ் பட்டியலில் தமிழகம் எந்த இடத்தில் இருக்கு தெரியுமா?

2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் சீனாவில் கொரோனா நோய்த் தொற்று பரவத் தொடங்கியது. இந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அலை இந்தியாவில் அதன் பரவல் அதிகரித்தது.. மத்திய அரசு ஊரடங்கு உத்தரவை அறிவித்தது. இதனால் நோய்த் தொற்று பரவல் கட்டுப்படும் என்று கருதினர். நினைத்தற்கு எதிராக தினந்தோறும் புதிய நோயாளிகள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றனர்.

தமிழகத்தைப் பொறுத்தவரை நோய்ப் பரவல் அதிகம் உள்ள மாநிலங்களில் ஒன்றாகவே தொடக்கம் முதலே இருந்து வருகிறது.

கொரோனா ஆக்டிவ் கேஸஸ் பட்டியலில் தமிழகம் எந்த இடத்தில் இருக்கு தெரியுமா?

தமிழகத்தின் மாநகரங்களில் மட்டும் குறிப்பாகச் சொல்வதென்றால் விமான நிலையங்கள் இருக்கும் நகரங்களில் மட்டும் நோய்ப் பரவல் அதிகமாக இருந்தது. பின்பு, பெருநகரம், நகரம், தற்போது சின்னச் சின்ன கிராமங்கலிலும் நோய்த் தொற்று அதிகரித்து வருகிறது.

புதிய நோயாளிகள் அதிகரித்தாலும் குணம் அடைபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதும் இறப்போரின் சதவிகிதம் குறைவதும் ஆறுதல் அளிக்கக்கூடிய செய்திகளே.நேற்றைய நிலவரப்படி இந்தியாவில் எந்தெந்த மாநிலங்களில் கொரோனாவின் பாதிப்பு எவ்வளவு எனும் வரைபடம் மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா ஆக்டிவ் கேஸஸ் பட்டியலில் தமிழகம் எந்த இடத்தில் இருக்கு தெரியுமா?

அதன்படி இந்திய அளவில் ஆக்டிவ் கேஸஸில் தமிழகம் நான்காம் இடத்தில் உள்ளது. 1,49,520 ஆக்டிவ் கேஸஸுடன் மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது. 73,227 ஆக்டிவ் கேஸஸுடன் கர்நாடகா இரண்டாம் இடத்தில் உள்ளது. 72,188 ஆக்டிவ் கேஸஸுடன் ஆந்திர பிரதேசம் மூன்றாம் இடத்தில் உள்ளது. 56.738 ஆக்டிவ் கேஸஸுடன் தமிழ்நாடு நான்காம் இடத்தில் உள்ளது.  36,037 ஆக்டிவ் கேஸஸுடன் உத்திரப் பிரதேசம் ஐந்தாம் இடத்தில் உள்ளது.

மேற்கு வங்கம் ஆறாம் இடத்திலும். பீகார் ஏழாம் இடத்திலும் தெலுங்கானா எட்டாம் இடத்திலும், குஜராத் ஒன்பதாம் இடத்திலும் ஒடிசா பத்தாம் இடத்திலும் ஆக்டிவ் கேஸஸ் பட்டியலில் உள்ளன.

கொரோனா ஆக்டிவ் கேஸஸ் பட்டியலில் தமிழகம் எந்த இடத்தில் இருக்கு தெரியுமா?

கொரோனாவால் மரணம் அடைந்தவர்களின் வரிசையில் தமிழ்நாடு 4,034 பேரை இழந்து இரண்டாம் இடத்தில் உள்ளது. 15,316 பேரை இழந்து மகாராஷ்டிரா முதல் இடத்தில் உள்ளது. 3,989 பேரை இழந்து டெல்லி மூன்றாம் இடத்தில் உள்ளது.

கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சிகளில் பல நாடுகளும் முனைப்பு காட்டுவதால் விரைவில் நல்ல செய்தி கிடைக்கும் என உறுதியாக நம்புவோம்.