பழனி கோயில் அதிகாரிகளிடம், சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை

 

பழனி கோயில் அதிகாரிகளிடம், சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை

திண்டுக்கல்

பழனி முருகன் கோயில் சிலை செய்ததில் முறைகேடு நடந்த விவகாரம் தொடர்பாக, கோயில் அதிகாரிகளிடம், சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் இன்று விசாரணை மேற்கொண்டனர். முருக பெருமானின் மூன்றாம் படைவீடான பழனி கோயிலில் கடந்த 2004ஆம் ஆண்டு நவபாஷாண மூலவர் சிலையை மறைத்து, மூலவர் சிலை முன் தங்கம் உள்ளிட்ட உலோகங்களால் ஆன உற்சவர் சிலை வைக்கப்பட்டதில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. அப்போதைய தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா, போகர் நிறுவிய நவபாஷாண சிலைக்கு மாற்றாக உற்சவர் சிலை நிறுவ முற்பட்டு, அதற்கான சிலையும் செய்து நிறுவப்பட்டது.

பழனி கோயில் அதிகாரிகளிடம், சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை

முதலில் 220 கிலோ எடை கொண்ட இந்த உற்சவர் சிலையானது, தங்கச்சிலை என்று சொல்லப்பட்டது. கோயிலில் நிறுவப்பட்ட தங்கச்சிலை சில நாட்களிலேயே கருத்ததால் சர்ச்சை ஏற்பட்டது. சிலையை ஆய்வுசெய்ததில் குறிப்பிட்ட அளவைவிட மிகவும் குறைவாகவே தங்கமே கலந்திருப்பது தெரியவந்தது. மேலும், சென்னை ஐஐடி உலோகவியல் பேராசிரியர் முருகையன் அமிர்தலிங்கம் தலைமையிலான குழுவினர் மேற்கொண்ட சோதனையில், தங்கம் குறைவாக உள்ளதை உறுதிப்படுத்தினர்.

பழனி கோயில் அதிகாரிகளிடம், சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை

இந்த விவகாரம் தொடர்பாக நடந்த விசாரணையில் அப்போதைய சிலைக்கடத்தல் தடுப்புப் பிரிவு ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் தலைமையிலான போலீசார், அப்போதைய, இந்துசமய அறிநிலையத்துறை ஆணையர் தனபால், சிலையை செய்த ஸ்தபதி முத்தையா, நகை மதீப்பீட்டாளர்கள் தேவேந்திரன், புகழேந்தி உள்ளிட்டோரை கைதுசெய்து, விசாரணைக்கு உட்படுத்தினர். இந்த நிலையில் சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு ஏ.டி.எஸ்.பி மாதவன் தலைமையிலான போலீசார், இன்று பழனி கோயில் அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொண்டனர். பழனியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் இந்த விசாரணை நடைபெற்ற வருகிறது. நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் துவங்கியுள்ள சிலை முறைகேடு விசாரணை, பழனி கோயில் நிர்வாகத்தினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.