அண்ணாசாலையில் கருணாநிதிக்கு சிலை – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!!

 

அண்ணாசாலையில் கருணாநிதிக்கு சிலை – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!!

சென்னை அண்ணா சாலையில் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி சிலை மீண்டும் வைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

அண்ணாசாலையில் கருணாநிதிக்கு சிலை – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!!

இந்நிலையில் சென்னை அண்ணாசாலையில் ஏதாவது ஒரு இடத்தில் முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கு சிலை வைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். திராவிட கழகத் தலைவர் வீரமணி உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கோரிக்கை வைத்த நிலையில் நீதிமன்ற வழிகாட்டுதலுக்கு உட்பட்டு, சட்ட வல்லுனர்களை ஆலோசித்து அண்ணாசாலையில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை வைக்கப்படும் என்று பேரவையில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா சாலையில் ஏற்கனவே பெரியார், அண்ணா, எம்ஜிஆர் ஆகியோருக்கு சிலைகள் உள்ளன.

அண்ணாசாலையில் கருணாநிதிக்கு சிலை – முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு!!

ஏற்கனவே முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவியேற்றபோது மதுரையில் கலைஞர் நூலகம் அமைக்கப்படும் என அறிவித்திருந்தார். அதேபோல் சென்னை மெரினா கடற்கரையில் 39 கோடி மதிப்பிலான நினைவிடம் கட்டப்படும் என்றும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.