“ஓடிடி-க்கு எதிரான பிரச்னை சூர்யாவுக்கு எதிராக திசை திருப்பப்படுகிறது ” : இயக்குநர் பாரதிராஜா

 

“ஓடிடி-க்கு எதிரான பிரச்னை சூர்யாவுக்கு எதிராக திசை திருப்பப்படுகிறது ” : இயக்குநர் பாரதிராஜா

நடிகர் சூர்யாவின் சூரரைப் போற்று திரைப்படம் வரும் அக்டோபர் 30 ஆம் தேதி அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது. கடந்த 5 மாதமாக தியேட்டர்கள் மூடப்பட்டுள்ள நிலையில் சூர்யாவின் இந்த முடிவுக்கு தியேட்டர் உரிமையாளர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

“ஓடிடி-க்கு எதிரான பிரச்னை சூர்யாவுக்கு எதிராக திசை திருப்பப்படுகிறது ” : இயக்குநர் பாரதிராஜா

இந்நிலையில் இதுகுறித்து இயக்குநர் பாரதிராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஓடிடிக்கு எதிரான பிரச்னை சூர்யா என்ற தனி நபருக்கு எதிராக பிரச்சினையாக திசை திருப்பி விடப்பட்டுள்ளது. இதற்கு பின்னணியில் உள்ள அரசியலை நானும் அறிவேன்; நீங்களும் அறிவீர்கள். சூர்யாவை மட்டுமல்ல எந்த ஒரு கலைஞனையும் காயப்படுத்தாதீர்கள்; மனம் வலிக்கிறது. தனிநபர் இடைவெளியுடன் காண ஓடிடி சிறந்த தளமாக இருக்கும் என்று நல்லெண்ணத்தில் சூர்யா முடிவெடுத்துள்ளார். ஓடிடியில் வெளியிட சூர்யா எடுத்த முடிவு வரவேற்க கூடியது. சூரரைப்போற்று தமிழனைப் போற்றும்.

தியேட்டரில் டிக்கெட் விலையை விட பாப்கான் பார்க்கிங் விலை அதிகம். ஒரு சாமானிய மனிதன் ஆயிரம் இரண்டாயிரம் கொடுத்து எப்படி குடும்பத்தோடு தியேட்டருக்கு வர முடியும்? மக்கள் தமிழ் ராக்கர்ஸ் படம் பார்ப்பதற்கு நாமும் ஒரு காரணம் என்பதை மறுக்க முடியாது. தியேட்டர் உரிமையாளர்கள், விநியோகஸ்தர்களே பேசித் தீர்ப்போம்” என்று கூறியுள்ளார்.