அமெரிக்க தேர்தல் முடிவு திக்…திக்… பென்சில்வேனியா மாகாண நிலவரம் என்ன?

 

அமெரிக்க தேர்தல் முடிவு திக்…திக்… பென்சில்வேனியா மாகாண நிலவரம் என்ன?

நவம்பர் 3 – அன்று அமெரிக்காவில் அடுத்த அதிபருக்கான வாக்குப் பதிவு நடந்தது. வாக்குகளை எண்ணும் பணி நேற்று தொடங்கியது. வழக்கமாக, ஒரே நாளில் வாக்கு எண்ணிக்கை பெரும்பாலும் முடிக்கப்பட்டு அதிபர் யார் என்பது தெரிந்துவிடும். ஆனால், இம்முறை அது குழப்பம் நீட்டித்து வருகிறது.

குடியரசுக் கட்சி சார்பாக தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப்-ம், ஜனநாயகக் கட்சி சார்பில் ஜோ பைடனும் போட்டியிட்டார்கள்.

அமெரிக்க தேர்தல் முடிவு திக்…திக்… பென்சில்வேனியா மாகாண நிலவரம் என்ன?

நேற்றைய நிலவரப்படி ட்ரம்ப் 213 என்றும் ஜோ பைடன் 238 என்று இருந்தது. அந்த நிலை மாறி, ஜோ பைடன் பக்கம் ஆதரவாக சூழல் மாறிக்கொண்டிருக்கிறது. தற்போதைய நிலவரப்படி ஜோ பைடன் 264; ட்ரம்ப் 214 என்றும் உயர்ந்திருக்கிறது.

இந்நிலையில் பென்சில்வேனியா மாகாண தேர்தல் முடிவு மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இந்த மாகாணத்தில் 20 உறுப்பினர்களைக் கொண்டது என்பதால் இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

அமெரிக்க தேர்தல் முடிவு திக்…திக்… பென்சில்வேனியா மாகாண நிலவரம் என்ன?

பென்சில்வேனியாவில் ட்ரம்ப் 50.7 சதவிகித ஓட்டுகளோடு முன்னிலையில் இருக்கிறார். ஜோ பைடன் ரொம்பவும் பின் தங்கிவிடவில்லை. அவரின் ஓட்டு சதவிகிதம் 48.1 தான். இரண்டே சதவிகிதம் இடைவெளி. மேலும் நேற்றையை விட இன்று அதிகளவில் பைடன் ஓட்டு வாங்கி வருவதாகச் செய்திகள் சொல்கின்றன. அதனால், முடிவு எப்படியும் அமையலாம் என்பதால் பென்சில்வேனியாவின் முடிவை ஆவலோடு எதிர்பார்க்கின்றனர்.