• February
    26
    Wednesday

Main Area

Main



ஒரு சில மாதங்களில் ஈரான் அரசு கவிழும்... முன்னாள் பட்டத்து இளவரசர் சொல்கிறார்

இளவரசர் ரேசா பஹ்லவி
இளவரசர் ரேசா பஹ்லவி

இன்னும் ஒரு சில மாதங்களில் ஈரான் அரசு கவிழும் என்று ஈரான் நாட்டின் முன்னாள் பட்டத்து இளவரசர் ரேசா பஹ்லவி தெரிவித்துள்ளார்.

resa

ஈரானில் புரட்சி ஏற்பட்டதால் பட்டத்து இளவரசர் ரேசா பஹ்லவி அந்நாட்டிலிருந்து வெளியேறி வெளிநாட்டில் தஞ்சம் புகுந்தார். தற்போது அமெரிக்காவில் இருக்கும் அவர் நிருபர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
"தற்போது நடக்கும் நிகழ்வுகள் மற்றும் மக்கள் போராட்டங்களைப் பார்க்கும்போது நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு என்னுடைய தந்தையின் ஆட்சியை கவிழ்க்க நடந்த புரட்சி நினைவுக்கு வருகிறது. எப்போது வேண்டுமானாலும் அங்கு புரட்சி வெடித்து முடிவுக்கு வரலாம். சில வாரங்கள் அல்லது மாதங்களில் அதுவாக நடக்கும்.
ஈரான் அரசுக்கு எதிராக போராடும் மக்களிடையே அச்ச உணர்வு சிறிதும் இல்லை.

iran

ஆட்சியாளர்களுக்கும் மக்களுக்கும் இடையே இடைவெளி அதிகரித்துள்ளது. உலக அரங்கில் ஈரானை அமெரிக்க அதிபர் டிரம்ப் சிறப்பான முறையில் தனிமைப்படுத்தியுள்ளார். ஈரான் விவகாரத்தில் உலக நாடுகள் நேரடியாக தலையிட வேண்டியது இல்லை. ஈரான் அரசில் சீர்திருத்தம் செய்வதை விட அதைத் தூக்கி எறிவதே சிறந்தது என்று ஈரான் மக்கள் கருதுகின்றனர்" என்றார்.
ஈரான் மக்கள் சார்பாக நீங்கள் களம் இறங்குவீர்களா என்று நிருபர்கள் கேட்டபோது, அது பற்றி நான் இல்லை மக்கள்தான் முடிவெடுக்க வேண்டும்" என்றார்.

2018 TopTamilNews. All rights reserved.