கர்நாடகாவில் ஜூன் 7ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

 

கர்நாடகாவில் ஜூன் 7ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

இந்தியாவில் கொரோனா பரவல் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. குறிப்பாக கேரளா, மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகம் ,தமிழகம் ,மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் கொரோனா பரவலின் இரண்டாம் அலை தீவிரமாக பரவிவருகிறது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 லட்சத்து 59 ஆயிரம் பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டனர். கர்நாடகாவில் இன்று ஒரே நாளில் புதிதாக 32,218பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், 353 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை அம்மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 23,67,742 ஆக அதிகரித்துள்ளது.

கர்நாடகாவில் ஜூன் 7ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு

இந்நிலையில் கர்நாடகா ஜூன் 7 வரை ஊரடங்கை நீட்டித்து அம்மாநில முதல்வர் எடியுரப்பா உத்தரவிட்டுள்ளார். மேலும் அரசு மாவட்ட மருத்துவமனைகளில் கருப்பு பூஞ்சை நோயாள் பாதிக்கப்படுவோருக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும் என்றும், அவர் தெரிவித்தார்.