திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு அரசு தலைமை வழக்கறிஞர் நோட்டீஸ்!

 

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு அரசு தலைமை வழக்கறிஞர் நோட்டீஸ்!

கடந்த பிப்ரவரி மாதம் நடந்த திமுக கூட்டத்தில் நீதிபதிகள் மற்றும் தாழ்த்தப்பட்ட மக்கள் குறித்து அவமதிக்கும் வகையில் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசியதாக கூறப்படுகிறது. இதனால் ஆர்.எஸ்.பாரதி மீது, ஆதித்தமிழர் மக்கள் கட்சி தலைவர் கல்யாண் குமார் புகார் அளித்தார்.

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு அரசு தலைமை வழக்கறிஞர் நோட்டீஸ்!

அந்த புகாரின் பேரில் கடந்த 23 ஆம் தேதி, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சென்னையில் கைது செய்யப்பட்ட நிலையில், தாழ்த்தப்பட்டோர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதன் பின்னர் அவருக்கு எழும்பூர் நீதிமன்றத்தில் இடைக்கால ஜாமீன் வழங்கப்பட்டது. தாழ்த்தப்பட்ட மக்களை குறித்து அவமதிக்கும் வகையில் பேசியதற்கு மட்டுமே அவருக்கு இடைக்கால ஜாமீன் கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் நீதிபதிகள் குறித்து பேசியதற்கு இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு அரசு தலைமை வழக்கறிஞர் நோட்டீஸ்!

அதனால், வழக்கறிஞர் அந்தோணி ஆர்.எஸ்.பாரதி மீது நீதிபதிகளை அவமதிக்கும் வகையில் பேசியதற்காக அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி கோரி மனு அளித்திருந்தார். அந்த மனுவை விசாரித்த தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண், நீதிபதிகளை அவமதித்து பேசியதற்காக ஏன் அவமதிப்பு வழக்கை சந்திக்க கூடாது என்று கேள்வி எழுப்பினார். மேலும், இது தொடர்பாக 2 வாரத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.