30 ஆயிரம் பணியாளர்களுக்கு விருப்பு ஓய்வு திட்டம் ரெடி… பாரத ஸ்டேட் வங்கி அதிரடி

 

30 ஆயிரம் பணியாளர்களுக்கு விருப்பு ஓய்வு திட்டம் ரெடி… பாரத ஸ்டேட் வங்கி அதிரடி

பாரத ஸ்டேட் வங்கி விருப்பு ஓய்வு திட்டத்தை அமல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 30 ஆயிரத்துக்கும் அதிகமான நிரந்திர பணியாளர்கள் வி.ஆர்.எஸ். தேர்ந்தெடுக்க தகுதியானவர்கள் என தகவல்.

நம் நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி பாரத ஸ்டேட் வங்கியில் (எஸ்.பி.ஐ.) கடந்த மார்ச் இறுதி நிலவரப்படி, மொத்தம் 2.49 லட்சம் ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். பாரத ஸ்டேட் வங்கி தனது மனித வளங்கள் மற்றும் செலவினங்களை மேம்படுத்தும் நோக்கில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது செலவினங்களை மேம்படுத்தும் நோக்கில் விருப்பு ஓய்வு திட்டத்தை கையிலெடுத்துள்ளது.

30 ஆயிரம் பணியாளர்களுக்கு விருப்பு ஓய்வு திட்டம் ரெடி… பாரத ஸ்டேட் வங்கி அதிரடி
பாரத ஸ்டேட் வங்கி

விருப்பு ஓய்வு திட்டத்துக்கான வரைவு தயார் செய்யப்பட்டுள்ளதாகவும், வங்கியின் இயக்குனர்கள் குழுவின் ஒப்புதலுக்காக காத்திருப்பில் உள்ளதாகவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. பாரத ஸ்டேட் வங்கியில் 25 ஆண்டுகள் பணியாற்றியவர்கள் அல்லது 55 வயதை தாண்டிய நிரந்த பணியாளர்கள் இந்த விருப்பு ஓய்வு திட்டத்துக்கு தகுதியானவர்கள் என கூறப்பட்டுள்ளது.

30 ஆயிரம் பணியாளர்களுக்கு விருப்பு ஓய்வு திட்டம் ரெடி… பாரத ஸ்டேட் வங்கி அதிரடி
வங்கி

அதன்படி மொத்தம் 30,190 நிரந்தர பணியாளர்கள் விருப்பு ஓய்வு திட்டத்தை தேர்ந்தெடுக்க தகுதியானவர்கள். இதில் 11,565 அதிகாரிகளும், 18,625 பணியாளர்களும் அடங்குவர். இந்த விருப்ப ஓய்வு திட்டம் வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் பிப்ரவரி இறுதி வரை அமலில் இருக்கும். வி.ஆர்.எஸ். விரும்பும் பணியாளர்கள் அந்த திட்டம் அமலில் இருக்கும் போது விண்ணப்பித்தால் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.