எஸ்.பி.ஐ. வாடிக்கையாளரா நீங்க?… ஜூலை 1 முதல் ஏ.டி.எம்.-ல் பணம் எடுப்பதற்கான விதிமுறைகள் மாறுது உஷாரு!

எஸ்.பி.ஐ. வாடிக்கையாளரா நீங்க?… ஜூலை 1 முதல் ஏ.டி.எம்.-ல் பணம் எடுப்பதற்கான விதிமுறைகள் மாறுது உஷாரு!

கொரோனா வைரஸ் பரவலால் அமல்படுத்தப்பட்ட நாடு தழுவிய லாக்டவுனை மத்திய அரசு கடந்த மார்ச் 25ம் தேதி அமல்படுத்தியது. அதற்கு முந்தைய நாள் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், லாக்டவுன் சமயத்தில் மக்களின் நிதி சுமையை குறைக்கும் நோக்கில், அடுத்த 3 மாதங்களுக்கு (ஜூன் 30ம் தேதி வரை) ஏ.டி.எம்.களில் பணம் எடுப்பதற்கு வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூலிக்க கூடாது என வங்கிகளுக்கு அறிவுறுத்தினார்.

எஸ்.பி.ஐ. வாடிக்கையாளரா நீங்க?… ஜூலை 1 முதல் ஏ.டி.எம்.-ல் பணம் எடுப்பதற்கான விதிமுறைகள் மாறுது உஷாரு!

இதனையடுத்து, நம் நாட்டின் மிகப்பெரிய வங்கியான ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, தனது ஏ.டி.எம் மற்றும் இதர வங்கிகளின் ஏ.டி.எம்.களில் மேற்கொள்ளப்படும் இலவச பரிவர்த்தனை எண்ணிக்கைக்கு அதிகமான அனைத்து ஏ.டி.எம். பரிவர்த்தனைகளுக்கான கட்டணத்தை தள்ளுபடி செய்ய முடிவு செய்தது. வரும் 30ம் தேதியுடன் கட்டண தள்ளுபடி முடிவடைய உள்ளது. மேலும், கட்டண தள்ளுபடி நீடிக்கப்படும் என எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை. ஆகையால் வரும் 1ம் தேதி முதல் ஏ.டி.எம்.-ல் பணம் எடுப்பதற்தான பழைய விதிமுறைகள் மீண்டும் அமலுக்கு வரும்.

எஸ்.பி.ஐ. வாடிக்கையாளரா நீங்க?… ஜூலை 1 முதல் ஏ.டி.எம்.-ல் பணம் எடுப்பதற்கான விதிமுறைகள் மாறுது உஷாரு!

ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மெட்ரோ நகரங்களில் தனது வாடிக்கையாளர்களுக்கு மாதத்துக்கு மொத்தம் 8 ஏ.டி.எம். பரிவர்த்தனைகளை (5 எஸ்.பி.ஐ. ஏ.டி.எம்., 3 இதர வங்கி ஏ.டி.எம்.) இலவசமாக வழங்குகிறது. அதேசமயம் மெட்ரோ இல்லாத நகரங்களில் மாதத்துக்கு 10 ஏ.டி.எம். பரிவர்த்தனைகளை (5+5) இலவசமாக மேற்கொள்ள அனுமதி அளிக்கிறது. அதற்கு மேல் மேற்கொள்ளும் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் வாடிக்கையாளர்களிடம் எஸ்.பி.ஐ. கட்டணம் வசூலிக்கிறது. ஏ.டி.எம்.-ல் பணம் எடுப்பதற்கான விதிமுறைகள் வங்கிக்கு வங்கி மாறுபடுகிறது. ஆகையால் வங்கி வாடிக்கையாளர்கள் தாங்கள் கணக்கு வைத்துள்ள வங்கி கிளையின் கஸ்டமர் கேர் எண்ணுக்கு போன் செய்து விதிமுறைகளை தெரிந்து கொள்ளுவது நல்லது.