“கூட்டணி பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்குங்கள்” – அதிமுகவுக்கு, பிரேமலதா வலியுறுத்தல்

 

“கூட்டணி பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்குங்கள்” – அதிமுகவுக்கு, பிரேமலதா வலியுறுத்தல்

கூட்டணி பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டுமென அதிமுகவுக்கு, தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்லையொட்டி, அதிமுக சார்பில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் அதனுடன் கூட்டணியில் உள்ள தேமுதிக உள்ளிட்ட கட்சிகள், சட்டமன்ற தேர்தல் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை நடத்த வலியுறுத்தி வருகின்றன.

“கூட்டணி பேச்சுவார்த்தையை உடனடியாக தொடங்குங்கள்” – அதிமுகவுக்கு, பிரேமலதா வலியுறுத்தல்

ஆனால், தேர்தல் அறிவிப்புக்கு பின்னர் தான், கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெறும் என அதிமுக திட்டவட்டமாக அறிவித்துவிட்டது. இந்த நிலையில், தேமுதிக பொருளாளர் பிரேமலதா, அதிமுக உடனடியாக கூட்டணி பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டுமென வலியுறுத்தி உள்ளார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேர்தல் அறிவிப்புக்கு பின்னர் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவது என்பது காலதாமதத்திற்கு வழி வகுத்துவிடும் என்றும் கூறினார். மேலும், சசிகலா விவகாரத்தில் அதிமுக நல்ல நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்ற பிரேம லதா, தமிழக அரசியலில் சசிகலா பங்கேற்க வேண்டும் என்பது தன்னுடைய விருப்பம் என்றும் அவர் தெரிவித்தார்.