கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பப்பதிவு தொடக்கம்!

 

கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பப்பதிவு தொடக்கம்!

கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு ஆன்லைன் விண்ணப்பம் மாலை 6 மணிக்கு தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர ஆன்லைன் விண்ணப்பப்பதிவு தொடங்கியது.

கொரோனா வைரஸ் பாதிப்பின் காரணமாக நாடு முழுவதிலும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டிருக்கின்றன. கிட்டத்தட்ட 2 மாதங்களுக்கு மேலாக பள்ளி,கல்லூரிகள் மூடப்பட்டிருப்பதால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு ஆன்லைன் வகுப்புகள் நடத்துமாறு அரசு அறிவுறுத்தியது. அதன் படி பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடம் நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தில் கலை, அறிவியல் கல்லூரிகளில் இந்த ஆண்டு சேர ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தெரிவித்திருந்தார்.

கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பப்பதிவு தொடக்கம்!

இந்நிலையில் இளநிலை பட்டப்படிப்பில் சேர சான்றிதழ் பதிவேற்றம் செய்ய ஜூலை 25 முதல் ஆகஸ்ட் 5 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
http://tngasa.in, http://tndceonline.org – இல் ஜூலை 31 ஆம் தேதி வரை விண்ணப்ப பதிவு செய்யலாம். இணைய வசதி இல்லாத மாணவர்கள் 38 உதவி மையங்கள் மூலம் விண்ணப்பித்துக்கொள்ளலாம். இதன்மூலம் 109 அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் 92,000 இளநிலை இடங்கள் நிரப்பப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.