சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டி! ஓவைசி அதிரடி

 

சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டி! ஓவைசி அதிரடி

தமிழகத்தில் இஸ்லாமியர்களின் வாக்குகள் அதிமுக – திமுக என இருகட்சிகளுக்குமே சென்றாலும், முஸ்லீம்களின் வாக்குகள் பெரும்பாலும் திமுகவுக்கே சாதகமாக அமைந்து வருகின்றன. அதற்கு திமுகவுடன் உள்ள கூட்டணி கட்சிகளான மனிதநேய மக்கள் கட்சி உள்ளிட்ட இஸ்லாமிய கட்சிகளும் காரணம் என சொல்லப்படுகிறது. ஆனால் வர இருக்கும் சட்டமன்ற தேர்தலில் இந்த நிலை மாறும் என்றே தெரிகிறது. காரணம் பீகார் சட்டமன்ற தேர்தலில் கிங்மேக்கராக இருந்த அசாதுதீன் ஓவைசி தமிழக சட்டம்ன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளார். அகில இந்திய மஜ்லிஸ் இ இடிஹதுல் முஸ்லிம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி., ஐதராபாத்திலும், பீகாரிலும் தவிர்க்க முடியாத தலைவராக ஜொலிக்கிறார்.

சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டி! ஓவைசி அதிரடி

இந்நிலையில் அசாதுதீன் ஓவைசி தமிழக அரசியலில் தற்போது காலடி எடுத்துவைத்துள்ளார். வரும் சட்டசபை தேர்தலில் ஓவைசியின் அகில இந்திய மஜ்லிஸ் கட்சி போட்டியிடுவதாகவும், அதுவும் தனித்தே போட்டியிட திட்டமிட்டிருப்பதாகவும் தெரிகிறது.

முன்னதாக அசாதுதீன் ஓவைசி நாம்தமிழர் கட்சி மற்றும் மக்கள் நீதி மய்ய கட்சியுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினார் என தகவல்கள் வெளியானது குறிப்பிடதக்கது.