முத்திரைத்தாள் தட்டுப்பாடு – திருப்பத்தூர் மாவட்ட விற்பனையாளர்கள் கலக்கம்

முத்திரைத்தாள் தட்டுப்பாடு – திருப்பத்தூர் மாவட்ட விற்பனையாளர்கள் கலக்கம்

முத்திரைத்தாள் தட்டுப்பாட்டினால் திருப்பத்தூர் மாவட்டத்தில் விற்பனையாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். முத்திரைத்தாள் தட்டுப்பாட்டினால் பொதுமக்களும் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

முத்திரைத்தாள் தட்டுப்பாடு – திருப்பத்தூர் மாவட்ட விற்பனையாளர்கள் கலக்கம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆம்பூர், வாணியம்பாடி, சோலையார்பேட்டை, நாட்றம்பள்ளி என ஐந்து இடங்களில் சார் பதிவாளர் அலுவலகங்கள் இயங்கி வருகிறது. தினசரி குறைந்த பட்சம் திருப்பூர் மாவட்டம் முழுவதும் சுமார் 3 ஆயிரம் பத்திரப் பதிவு நடைபெறுகிறது. கருவூலங்கள் ரூ 10 முதல் 10000 வரை முத்திரைத் தாள்கள் வழங்கி வந்த நிலையில் அதனை முத்திரைத்தாள் விற்பனையாளர்கள் வாங்கி விற்பனை செய்து வந்தனர்.

முத்திரைத்தாள் தட்டுப்பாடு – திருப்பத்தூர் மாவட்ட விற்பனையாளர்கள் கலக்கம்

இந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக முத்திரைத்தாள் அதாவது ரூ 10, 20, 50, 100, 1000 2000 5000 10000 உள்ளிட்ட முத்திரை தாள்கள் கிடைப்பதில்லை. இதனால் முத்திரைத்தாள் விற்பனையாளர்கள் கலக்கத்தில் உள்ளனர். அதே நேரத்தில் பொதுமக்கள் அவதியில் உள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் முத்திரைத்தாள் விற்பனையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.