“அதிமுக அரசுடன் இணைந்து போராட தயார் என ஸ்டாலின் கூறியது அரசியல் நாடகம்” அமைச்சர் ஜெயக்குமார்

“அதிமுக அரசுடன் இணைந்து போராட தயார் என ஸ்டாலின் கூறியது அரசியல் நாடகம்”  அமைச்சர் ஜெயக்குமார்

அதிமுக அரசுடன் இணைந்து போராட தயார் என ஸ்டாலின் கூறியது குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கருத்து தெரிவித்துள்ளார்.

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “7.5 % இட ஒதுக்கீடு விவகாரத்தில் அதிமுகவில் சேர்ந்து போராட தயார் என ஸ்டாலின் கூறியது அரசியல் நாடகம். மசோதா தொடர்பாக முடிவெடுக்க ஆளுநருக்கு காலம் தேவைப்படும்” என்று கூறினார்.

“அதிமுக அரசுடன் இணைந்து போராட தயார் என ஸ்டாலின் கூறியது அரசியல் நாடகம்”  அமைச்சர் ஜெயக்குமார்

தமிழக மாணவர்களின் மருத்துவ படிப்புக்கு 7.5% உள்ஒதுக்கீடு அளிக்கும் சட்ட மசோதா அண்மையில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்ட மசோதா தற்போது ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் பரிசீலனையில் இருக்கிறது. இந்த விவகாரத்தில் விரைந்து முடிவெடுப்பதாக ஆளுநர் உறுதியளித்ததாக ஆளுநரை நேரில் சந்தித்த அமைச்சர்கள் தெரிவித்தனர்.

“அதிமுக அரசுடன் இணைந்து போராட தயார் என ஸ்டாலின் கூறியது அரசியல் நாடகம்”  அமைச்சர் ஜெயக்குமார்

இதையடுத்து 7.5% இடஒதுக்கீடு வழங்கும் மசோதாவுக்கு அனுமதியளிக்கக் கோரி ஆளுநருக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதினார். மேலும் இந்த நேர்வில் அதிமுக அரசுடன் இணைந்து போராட திமுக தயார். கட்சிகளுடன் பேசி போராட்டத்தை அறிவித்திட தமிழக முதல்வர் முன்வர வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார் . ஆனால் ஸ்டாலின் வலியுறுத்தலை அதிமுக அமைச்சர்கள் விமர்சித்து வருகின்றனர். முன்னதாக அமைச்சர் பாண்டியராஜன், ‘இது தேவையற்ற ஒன்று. ஸ்டாலின் போராட பல்வேறு பிரச்சினைகள் இருக்கின்றன. அதற்காக போராடட்டும்’ என்று கூறியது குறிப்பிடத்தக்கது .