ஸ்டாலினின் வேண்டுகோள்… குவியும் கொரோனா நிதி!

 

ஸ்டாலினின் வேண்டுகோள்… குவியும் கொரோனா நிதி!

கொரோனா இரண்டாவது அலை தமிழகத்தில் தீவிரமாக பரவி வரும் நிலையில், அதை கட்டுப்படுத்தும் நோக்கில் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நிதி வழங்குமாறு மு.க.ஸ்டாலின் சமீபத்தில் வேண்டுகோள் விடுத்தார். பொதுமக்கள், தொழிலதிபர்கள், சமூக அமைப்புகள் என யார் வேண்டுமானாலும் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்கலாம் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். அளிக்கப்படும் நிவாரண பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும் எனவும் அவர் உறுதி தெரிவித்தார்.

ஸ்டாலினின் வேண்டுகோள்… குவியும் கொரோனா நிதி!

முதல்வரின் வேண்டுகோளை அடுத்து திரை பிரபலங்களும், தொழிலதிபர்களும் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு கொரோனா நன்கொடையை வழங்கி வருகின்றனர்.

ஸ்டாலினின் வேண்டுகோள்… குவியும் கொரோனா நிதி!

அந்த வகையில் நடிகர் சூர்யா குடும்பத்தினர் ரூ.1 கோடி, ஜிஆர்டி குழுமம் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு ரூ.1 கோடி, zoho கார்பொரேஷன் சார்பில் ரூ.5 கோடி, திமுக அறக்கட்டளையின் சார்பில் கொரோனா நிவாரண பணிகளுக்காக ஒரு கோடி , விடுதலை கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் ரூ.10 லட்சம், பூர்விகா மொபைல்ஸ் 50 லட்ச ரூபாய்,

ஸ்டாலினின் வேண்டுகோள்… குவியும் கொரோனா நிதி!

டாக்டர் எம்.ஜி.ஆர் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ரூ. 50 லட்சம், கோவை ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனம் சார்பில் ரூ.1 கோடி, திமுக எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் ரூ. 25 லட்சம், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ரூ. 25 லட்சம் என பலரும் கொரோனா நிவாரண நிதிக்கு காசோலை வழங்கி வருகிறார்கள்.