வீடு தேடி வந்துவிட்டதால் ஸ்டாலின் போட்ட உத்தரவு – உதயநிதி எடுத்த அதிரடி முடிவு

 

வீடு தேடி வந்துவிட்டதால் ஸ்டாலின் போட்ட உத்தரவு – உதயநிதி எடுத்த அதிரடி முடிவு

தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்த உதயநிதி ஸ்டாலின் நடந்த சட்டமன்றத் தேர்தல் காரணமாக திரைப்படங்களில் நடித்து வந்ததை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஆனதால் அத்தொகுதியின் செயல்பாடுகளில் கவனம் செலுத்தி வந்தார்.

வீடு தேடி வந்துவிட்டதால் ஸ்டாலின் போட்ட உத்தரவு – உதயநிதி எடுத்த அதிரடி முடிவு

தொகுதியில் ஒவ்வொரு வீடாக சென்று தொகுதி மக்களின் தேவைகளை அறிந்து உடனுக்குடன் நிறைவேற்றி வந்திருந்தார். முன்னதாக சட்டமன்ற தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் சுற்றி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். இதனால் பல மாதங்களாக அவர் நடிப்பதை தள்ளி போட்டிருந்தார். தற்போது மீண்டும் அவர் நடிக்க தொடங்கியிருக்கிறார்.

வீடு தேடி வந்துவிட்டதால் ஸ்டாலின் போட்ட உத்தரவு – உதயநிதி எடுத்த அதிரடி முடிவு

போனி கபூர் தயாரிப்பில் அருண் காமராஜா இயக்கத்தில் ஆர்டிகிள் 15 என்ற ரீமேக் படத்தில் நடித்து வருகிறார். மேலும் மகிழ்திருமேனி இயக்கத்தில் நடித்துவரும் படத்தின் படப்பிடிப்பு 90 சதவிகிதம் முடிந்து விட்டதாம். இதையடுத்து மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படத்திலும் நடிக்கவிருக்கிறார்.

இந்த நிலையில் சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதி அலுவலகத்தில் தினமும் தொகுதி மக்களை சந்தித்து மனுக்களை பெற்று வந்த உதயநிதி திடீரென்று படப்பிடிப்புக்கு சென்று விட்டதால் தொகுதி மக்கள் சிலர் முக்கிய பிரச்சனைகளுக்காக உதயநிதியின் வீடு தேடி சென்று இருக்கிறார்கள். அங்கே, எம்எல்ஏ இல்லை அவர் ஷூட்டிங் விஷயமாக சென்று இருக்கிறார் என்று சொல்லி அனுப்பிக் கொண்டிருந்திருக்கிறார்கள்.

வீடு தேடி வந்துவிட்டதால் ஸ்டாலின் போட்ட உத்தரவு – உதயநிதி எடுத்த அதிரடி முடிவு

இதைக் கேள்விப்பட்ட முதல்வரும் திமுக தலைவருமான ஸ்டாலின், கட்சிப் பணிகள் இப்படி பிசியாக இருக்கும்போது இன்னமும் ஏன் சினிமாவை விடாமல் இருக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறாராம். இதனால் சினிமாவுக்கு தற்காலிக முழுக்கு போட உதயநிதி ஸ்டாலின் முடிவெடுத்துள்ளாராம். தற்காலிகமாக நடிப்பதை நிறுத்தும்போது மக்கள் மனதில் இருக்கும்படியாக ஒரு நல்ல சினிமாவை கொடுத்துவிட வேண்டும் என்று நினைக்கும் உதயநிதி அது மாரி செல்வராஜின் படமாக இருக்கும் என்று நம்பிக்கை வைத்திருக்கிறாராம்.