#FactCheck ஸ்டாலின் மகள் வீட்டிலிருந்து கட்டுக்கட்டாக பல கோடி ரூபாய் பறிமுதல்?

 

#FactCheck ஸ்டாலின் மகள் வீட்டிலிருந்து கட்டுக்கட்டாக பல கோடி ரூபாய் பறிமுதல்?

தமிழக சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி அரசியல் களம் தகித்துக் கொண்டிருக்கிறது. முக்கிய அரசியல் பிரமுகர்களை குறிவைத்து வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்கும் பொருட்டு இந்த சோதனை நடத்தப்படுவதாக வெளிப்படையாக சொல்லப்பட்டாலும், இதன் பின்புலத்தில் மத்திய பாஜக அரசு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் சந்தேகிக்கின்றனர். அதாவது, பாஜக அரசை யார் விமர்சித்தாலும் அங்கு ஐடி ரெய்டு நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. அண்மையில் திமுக வேட்பாளர் எ.வ.வேலுவுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டநிலையில் இன்று காலை ஸ்டாலினின் மகள் செந்தாமரை வீட்டில் இன்று காலை திடீரென வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.

#FactCheck ஸ்டாலின் மகள் வீட்டிலிருந்து கட்டுக்கட்டாக பல கோடி ரூபாய் பறிமுதல்?

இந்நிலையில் ஸ்டாலினின் மகள் வீட்டில் இருந்து இதுவரை கணக்கில் காட்டப்படாத ₹700 கோடி ரொக்கம் மற்றும் 260 கிலோ தங்க கட்டிகள், ₹30000 கோடி மதிப்புள்ள வரி ஏய்ப்பு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது. அதன்பின் டாப் தமிழ் நியூஸ் நடத்திய Face check இல், வெளியான புகைப்படங்களும், தகவலும் உண்மை இல்லை என்பதும், 2019 ஆம் ஆண்டு வேலூரில் நடைபெற்ற சோதனையின் போது கைப்பற்றப்பட்ட பணத்தின் புகைப்படங்களே தற்போது திமுகவின் நற்பெயருக்கு கலங்க விளைவிக்க பரப்பப்படுவதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. செந்தாமரை வீட்டிலிருந்து இதுவரை வருமானவரித்துறையினரால் பணமோ, ஆவணங்களோ கைப்பற்றப்பட்டதாக அதிகாரப்பூர்வ அறிக்கை ஏதும் வெளியாகவில்லை