“ஸ்டாலின் கொரோனா; உதயநிதி ஸ்டாலின் உருமாறிய கொரோனா” – வைகைச்செல்வன் கடும் தாக்கு!

 

“ஸ்டாலின் கொரோனா; உதயநிதி ஸ்டாலின் உருமாறிய கொரோனா” – வைகைச்செல்வன் கடும் தாக்கு!

ஷிவானி, ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த ஓட்டு கூட கமல் ஹாசனுக்கு விழாது என்று அதிமுக செய்தி தொடர்பாளர் வைகைச்செல்வன் தெரிவித்துள்ளார்.

“ஸ்டாலின் கொரோனா; உதயநிதி ஸ்டாலின் உருமாறிய கொரோனா” – வைகைச்செல்வன் கடும் தாக்கு!

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச்செல்வன் கலந்து கொண்டு சிறப்பித்தார். நிகழ்ச்சியில் பேசிய வைகைச்செல்வன், “தமிழ்நாட்டில் பல பேர் கட்சி தொடங்கி விட்டு என்ன செய்வது என்று தெரியாமல் திணறி கொண்டு இருக்கிறார்கள்.கமலை மக்கள் நடிகராக மட்டும் தான் பார்ப்பார்கள். சட்டமன்ற தேர்தலை பிக்பாஸ் நிகழ்ச்சி என்று அவர் நினைத்துக் கொண்டிருக்கிறார். ஷிவானி, ரம்யா பாண்டியனுக்கு கிடைத்த ஓட்டு கூட கமல் ஹாசனுக்கு விழாது. மு.க.ஸ்டாலின் கொரோனா , உதயநிதி ஸ்டாலின் உருமாறிய கொரோனா. பெண்களைப்பற்றி உதயநிதி ஸ்டாலின் தரக்குறைவாக பேசி வருகிறார். இதனை கேட்டுக்கொண்டு ஸ்டாலின் கைகட்டி வேடிக்கை பார்த்து வருகிறார்” என்றார்.

“ஸ்டாலின் கொரோனா; உதயநிதி ஸ்டாலின் உருமாறிய கொரோனா” – வைகைச்செல்வன் கடும் தாக்கு!

தொடர்ந்து பேசிய வைகைச்செல்வன், ‘வாக்காளரிடம் கடன் சொல்லியவர் ஒருவர் இருக்கிறார். அவர்தான் டிடிவி தினகரன். அவர் ஆர்.கே. நகர் தொகுதியில் வாக்காளரிடம் ரூ.5 தருகிறேன் என்று சொல்லி கடன் வைத்திருக்கிறார். இன்னும் சிலரோ பள்ளி கட்டிடத்திற்கு வாடகை கட்டணம் கூட சிலர் கட்ட முடியாமல் கட்சியே வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள்’ என்றார்.