ராமதாசுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய ஸ்டாலின்!

 

ராமதாசுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய ஸ்டாலின்!

பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாசுக்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்து கூறியது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமதாசுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய ஸ்டாலின்!
கடந்த சட்டமன்ற தேர்தலுக்கு முன்பு இருந்தே தி.மு.க-வை கடுமையாக விமர்சித்து வருகிறார் டாக்டர் ராமதாஸ். நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க, அ.தி.மு.க-வுடன் கூட்டணி அமைத்து மிகப்பெரிய அளவில் ஸ்டாலினை விமர்சித்தார். முரசொலி

http://

மூலப்பத்திரம் என்று ஸ்டாலினை பா.ஜ.க ஐ.டி விங் கிண்டல் செய்யும் அளவுக்கு தி.மு.க – பா.ம.க இடையே மோதல் இருந்தது. ராமதாஸ் எந்த ஒரு அறிக்கை வெளியிட்டாலும் அதில் ஏதாவது ஒரு இடத்தில் தி.மு.க-வை விமர்சிக்க மறப்பது இல்லை.
இந்த நிலையில் இன்று பிறந்த நாள் கொண்டாடும் ராமதாசுக்கு ஸ்டாலின் வாழ்த்து கூறியிருப்பது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த வாழ்த்து செய்தியில், “இன்று 81 ஆவது பிறந்தநாள் கொண்டாடும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் அய்யா ராமதாஸ் அவர்களை அன்புடன் வாழ்த்துகிறேன். உடலும் உள்ளமும், நலமும் திடமும் கொண்டு நீண்டகாலம் வாழ வாழ்த்துகிறேன்!” என்று கூறியுள்ளார்.

http://


முன்னதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட வாழ்த்து ட்வீடில், “இன்று 81-வது பிறந்தநாள் காணும் பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரும், மூத்த

ராமதாசுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய ஸ்டாலின்!

அரசியல்வாதியுமான மருத்துவர் ராமதாஸ் அவர்கள் நீண்ட ஆயுளுடனும், நல்ல ஆரோக்கியத்துடனும், வளமும் நலமும் பெற்று நீடூழி வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்பதாக தொலைப்பேசி மூலம் வாழ்த்து தெரிவித்தேன்” என்று கூறியிருந்தார்.