ஸ்டாலினுக்கு தினமும் என்னை நினைத்தால் தான் தூக்கம் வரும் – முதல்வர் பழனிசாமி விமர்சனம் !

ஸ்டாலினுக்கு தினமும் என்னை நினைத்தால் தான் தூக்கம் வரும்  – முதல்வர் பழனிசாமி  விமர்சனம் !

எதிர்க்கட்சிகள் மக்கள் நலனோடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

ஸ்டாலினுக்கு தினமும் என்னை நினைத்தால் தான் தூக்கம் வரும்  – முதல்வர் பழனிசாமி  விமர்சனம் !

சேலம் அருகே வனவாசியில் அரசு விழா முடிவுற்ற பணிகளை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். ரூ.292 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்ட பணிகளை தொடங்கி வைத்த அவர், ரூ.118.93 கோடியில் 44 புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டினார்.

ஸ்டாலினுக்கு தினமும் என்னை நினைத்தால் தான் தூக்கம் வரும்  – முதல்வர் பழனிசாமி  விமர்சனம் !

இந்நிலையில் சேலத்தில் முடிவுற்ற பல்வேறு திட்டப் பணிகளை தொடங்கி வைத்த பின் பேசிய முதல்வர் பழனிசாமி, ‘மருத்துவப்படிப்பில் 7.5% இடஒதுக்கீட்டால் அரசு பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். தமிழக அரசு மீது ஏதாவது குறை சொல்ல வேண்டும் என்ற முனைப்பில் எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றன. எதிர்க்கட்சிகள் மக்கள் நலனோடு செயல்பட வேண்டும், அரசியலோடு செயல்படக் கூடாது.கொரோனா தொற்று மற்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் குறைந்து வருகிறது. ஸ்டாலினுக்கு நாள்தோறும் என்னைப் பற்றி நினைத்தால் தான் தூக்கம் வரும்.தமிழகம் முதலிடத்தில் இருப்பது பொறுக்க முடியாமல் ரூமில் உட்கார்ந்து ஸ்டாலின் அறிக்கை விடுகிறார். தினந்தோறும் அறிக்கை விடும் மு.க.ஸ்டாலின் அறிக்கை நாயகனாக வேண்டுமானால் திகழலாம்’ என்றார்.