“ஸ்டாலின் சட்டப்போராட்டம் நடத்தி, நீட் தேர்வை ரத்து செய்வார்” – உதயநிதி

 

“ஸ்டாலின் சட்டப்போராட்டம் நடத்தி, நீட் தேர்வை ரத்து செய்வார்” – உதயநிதி

திருச்சி

திமுக தலைவர் ஸ்டாலின் சட்டப் போராட்டம் நடத்தி கண்டிப்பாக, நீட் தேர்வை ரத்து செய்வார் என்று அந்த கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். திருச்சி மாவட்டம் லால்குடியில் இன்று தனது 17-வது நாள் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய அவர், ஸ்ரீரங்கம் ராஜகோபுரத்திற்கு முன்பாக தொண்டர்களிடம் உரையாற்றினார். அப்போது, இந்தியாவில் மூன்றாவது பெரும்பான்மையான கட்சியாக திமுக உருவாக, நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் தக்க பதிலடி கொடுத்ததாகவும், அது ஆளுங்கட்சியினருக்கு சம்பட்டி அடி என்றும் கூறினார்.

“ஸ்டாலின் சட்டப்போராட்டம் நடத்தி, நீட் தேர்வை ரத்து செய்வார்” – உதயநிதி

அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூராப்பா மீது 700 கோடி ஊழல் வழக்கு உள்ளதாக தெரிவித்த உதயநிதி ஸ்டாலின், அவரை ஆரம்பத்திலேயே வேண்டாம் என்றவர் ஸ்டாலின் எனவும் குறிப்பிட்டார். தொடர்ந்து, நீட் தேர்வை தமிழகத்தில் ரத்து செய்ய திமுகவால் முடியும் என்ற உதயநிதி ஸ்டாலின், மாணவர்களுக்காக சட்ட போராட்டம் நடத்தி ஸ்டாலின் நீட்டை ரத்து செய்வார் என்றும் உறுதி அளித்தார். முதலமைச்சர் 6 ஆயிரம் கோடி சாலை கான்டிராக்டை தனது சம்பந்திக்கு கொடுத்து ஊழல் செய்துள்ளதாக குற்றம்சாட்டிய அவர், சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்தால், அவர் காணாமல் போய் விடுவார் என்றும் தெரிவித்தார்.,

“ஸ்டாலின் சட்டப்போராட்டம் நடத்தி, நீட் தேர்வை ரத்து செய்வார்” – உதயநிதி

மேலும், அமைச்சர்கள் மீதான ஊழல் பட்டியலை கையில் வைத்துக்கொண்டு தான், பாஜக சிபிஐ வைத்து அதிமுகவை மிரட்டி வருகிறது என்றும், அவர்களுக்கு பயந்து தொடர்ந்து மத்திய அரசின் திட்டங்களை உள்ளே அனுமதித்து வருவதாகவும் தெரிவித்தார். இறுதியாக, திமுக தலைவர் விரைவில் ஒரு வெற்றி கூட்டணியையும் அறிவிப்பார் என்ற உதயநிதி, ஜெயலலிதாவின் இறப்பில் உள்ள சந்தேகங்களை கேட்கக் கூட அதிமுகவால் முடியவில்லை என்றும் தெரிவித்தார்.